26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
The kitchen Decorator Modular Kitchen .gif
ஆரோக்கிய உணவு

சமையல் அறையை அழகாக்கும் ‘மாடுலர் கிச்சன்!

The kitchen Decorator Modular Kitchen .gif

வீட்டில் இல்லத்தரசிகளின் பிரதான பகுதியாக விளங்குவது சமையல் அறை. சில சமயங்களில் சமையல் அறைகள் வரைமுறை இல்லாமல் கட்டப்பட்டு விடுகின்றன.
பெரும்பாலானோர் வீட்டின் கடைசி அறையாகத்தான் சமையல் அறையை அமைப்பதால் அதன் பரப்பளவு சுருங்கி போய் விடுகிறது. இதனால் இல்லத்தரசிகள் எதிர்பார்க்கும் வசதிகளை ஏற்படுத்த முடியாத நிலையும் உருவாகி விடுகிறது. வசதிகேற்ப வரவேற்பறை மற்றும் படுக்கையறைகள் நவீனமாக்கப்பட்டாலும் சமையல் அறைகள் பழைய நிலையிலே பெரும்பாலானோர் வீடுகளில் காட்சி அளிக்கும். உங்கள் இல்லங்களிலும் சமையல் அறைகள் நவீனப்படுத்தப்படாமல் இருந்தால்  கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்தி மாடுலர் கிச்சன்களை உருவாக்குங்கள்.
* சமையல் அறையின் சுவர் பகுதிகளில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்குகளை நீக்கி பளிச்சென்ற வண்ணங்களை தேர்வு செய்து பூசவேண்டும். ஏனெனில் நவீன கட்டிடங்களாக கலைநயத்துடன் காட்டுபவை ரம்யமான நிறங்களே.
* சமையல் அறையில் வெளிப்படும் வெப்பத்தை வெளியேற்ற ‘வென்டிலேசன் பேன்களை’ பொருத்தி இருப்பார்கள். இவை பொருத்தப்படாத சமையல் அறைகளில்  வெப்பம், புகை போன்றவை அறையில்  உலாவிக் கொண்டிருக்கும். ஆனால் தற்போது சமையல் அறை நவீனமாக்கப்படுவதால் ‘வென்டிலேசன் பேன்’களை அகற்றி விட்டு சிம்னிகளை பொருத்தலாம். சிம்னி பொருத்தப்படாத பட்சத்தில் வென்டிலேசன் பேன்களை பயன்படுத்தலாம்.
* அடுப்பினை வைக்கப் பயன்படுத்தப்படும் கிச்சன் மேடை மாடுலர் கிச்சனில் முக்கிய பங்காற்றுபவை. சமையல் அறையின் நிறத்திற்கு அடுத்தபடியாக மேடைகளே அதிக கவனத்தை ஈர்ப்பவை. இதற்காக சமையல் மேடையை பளபளப்பான மேற்பகுதியாக மாற்றலாம். அறையின் வண்ணத்திற்கு ஏற்ப மேடையின் நிறத்தினை  தேர்ந்தெடுப்பது ரம்யத்தை அதிகரிக்கும்.
* சமையல் அறையில் இணைக்கப்பட்டுள்ள மின்சாரம் மற்றும் தண்ணீர் குழாய் இணைப்புகளை சரி பார்த்துவிட்டு வடிவமைப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றை  இணைத்துக் கொள்ள வேண்டும்.
* முன்னதாக கட்டமைக்கப்பட்ட கட்டுமானங்களில் சமையல் அறையில் சீலிங் விளக்குகள் இருக்காது. ஆனால் மாடுலர் கிச்சன் அறையில் மென்மையாக ஒளிரக்கூடிய சீலிங் விளக்குகள் இருக்கும். சிலிங் பகுதியில் விளக்குகளை ஒளிரவிட வாய்ப்பில்லாமல் இருந்தால் மூலைகளில் ஒளிரவிடலாம்.
* மேலும் இரவு நேரங்களில் சமைப்பதற்கு வசதியாக அதிக திறன் கொண்ட விளக்குகளும் பொருத்தபட வேண்டும். பளிச்சென்று எரியும் விளக்குகளை தேவைக்கு ஏற்ப மட்டும் ஒளிரவிட, கலைநயத்திற்காக மென்மையான மஞ்சள் நிற விளக்குகளை ஒளிரவிடலாம். மேலும் விளக்குகளை அனைத்து இடங்களிலும் ஒளிரவிடும்படி செய்யாமல் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒளிரவிட வேண்டும். அப்படி செய்தால் அறையும் நவீன மாற்றத்தை வெளிக்காட்டும்.
* சமையல் அறையின் கபோர்ட்டு மற்றும் ரேக்குகளின் வெளிபுற கதவுகளை அப்படியே விட்டுவிடாமல் அதில் ஏதேனும் டிசைன்களை வரைவது சமையல் அறைக்கு அலங்கார காரணியாக அமையும். மேலும் கபோர்ட் வண்ணங்கள் அறையின் வண்ணத்திற்கு பொருத்தமான வகையில் இருப்பது கண்களை கவரும் ரகம்.
* கபோர்ட் மற்றும் ரேக்குகளை கிச்சன் மேடையின் அடிப்பகுதியிலும் அமைக்கலாம். இது இடத்தினை அடைக்காமல் இருக்கும். மேலும் சமைக்கும் இடத்தில் இருந்தே பொருட்களை எளிமையாக எடுக்க இவை வழிவகை செய்யும்.
* மேலும் சமையல் மேடையில் அடுப்புகளை வெளிப்புறமாக வைக்காமல் மேடையின் நடுவே சிறு பள்ளமாக அமைத்து அதனுள் பதியும் படி வைப்பது மேடைக்கான அழகினை அதிகரிக்கும். இதனால் மேடையின் மீது பாத்திரங்கள் இருப்பது போன்று தெரியும்.
* சமையல் அறையில் இடம் பெறும் பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற சாதனங்களை தினசரி பயன்படுத்தி விட்டு அதனை துடைத்து சுத்தமாக பராமரித்து வரவேண்டும். சில வீடுகளில் கிச்சனை அலங்கரிக்கும் வகையிலான நிறங்களிலே பிரிட்ஜ் மற்றும் கிரைண்டர்களை தேர்வு செய்வார்கள்.
* விருந்தினர்களாக வருபவர்கள் சமையல் அறைக்குள் நுழைந்தால் பொருட்களை எப்படி வைத்திருக்கிறோம் என்று தான் முதலில் பார்ப்பார்கள். அதனால் பொருட்களை வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். பொருட்களை பயன்படுத்திய பின் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். முக்கியமாக சமைத்த பின்பு உடனே பாத்திரங்களை சுத்தம் செய்து விட வேண்டும். அவ்வாறு செய்தால் பாத்திரங்கள் சமையல் மேடையில் குவிந்து கிடக்காது. அதனாலும் அறையின் அழகு மேம்படும்.
* பிரிட்ஜை கவனமாக பராமரித்துவர வேண்டும். அதில் இருந்து துர்நாற்றம் வீசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பிரிட்ஜினுள் இருக்கும் பொருட்கள் ஒன்றில் துர்நாற்றம் வீசினாலும் பிரிட்ஜ் முழுவதும் பரவி விடும். அதனால் அழுகும் நிலையில் இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்தி விட வேண்டும்

Related posts

முருங்கைப்பூ வின் மகத்துவம் பற்றி அறிந்தால் இனி முருங்கைப்பூ சமையலை விரும்பி செய்வீர்கள்.

nathan

சத்து மற்றும் சுவையான பேரீச்சம் பழம் பாயாசம் செய்முறை

nathan

உங்களுக்கு தெரியுமா பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

nathan

உணவில் அதிகளவு தேங்காய் சேர்ப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா?

nathan

சுவையான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட்

nathan

உங்களுக்கு தெரியுமா அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது…?

nathan

சூப்பரான வெண் பொங்கல்

nathan

நுங்கு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடாக்கக்கூடாது ?

nathan