25.7 C
Chennai
Sunday, Dec 15, 2024
ஆரோக்கிய உணவு

கோடை வெயிலுக்கு குளுமை தரும் மோர்

 

கோடை வெயிலுக்கு குளுமை தரும் மோர் கோடை வெயிலுக்கு எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும், மோர், தயிருக்கு இணையாகாது. இதில், தயிரை ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது.

கரண்டியால் வில்லை வில்லையாக வெட்டி எடுக்க முடியாதபடி இருக்கும் கொழ கொழ தயிரையும் சாப்பிடக்கூடாது என ஆயுர்வேதத்தில் ஒரு பட்டியலே சொல்லப்படுகிறது. தயிரோடு ஒப்பிடும்போது மோர் மிகவும் சிறந்தது. வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரி பங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

மோர் எளிதாக ஜீரணமாகிற உணவு. சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து. மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும். வெயிலால் உடம்பு சூடாகி, சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் சிறந்த மருந்து இதுதான்.

ரத்தசோகைக்கும் மோர் நல்லது. நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம், உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு. சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது. அந்த நேரங்களில் ‘ஸ்பெஷல் மோர்’ குடிக்கலாம்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுத் தாளித்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சீரகப் பொடியும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். இந்தத் தண்ணீர் ஆறியதும் இதில் மோரைக் கலந்து குடிக்கலாம். முக்கியமான விஷயம், மோரை நேரடியாகச் சூடு பண்ணக்கூடாது என்பதில் கவனம் வேண்டும்.

Related posts

பால், பழம்… சேர்த்துச் சாப்பிட்டால் என்ன ஆகும்? எதோடு எதைச் சாப்பிடக் கூடாது?

nathan

ஆண் மீனைவிட பெண் மீனைத்தான் சாப்பிடவேண்டும். ஏன்.. எப்படி?

nathan

பாதம் தொடர்பான உபாதைகள் குணமாக ஊதா அரிசி!…

nathan

கோடைக்கு ஏற்ற “நுங்கு பானம்”

nathan

உங்க உடம்பில் தொப்பையாக அதிகரித்துவிட்டதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கோவைக்காய்! முள் வேலியில் வளர்ந்து கிடப்பதில் இவ்ளோ பவரா?

nathan

ரத்த சோகையை போக்கும் பீட்ரூட்.!

nathan

வல்லாரை கீரையின் பயன்கள்

nathan

முட்டையை ஏன் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan