23.4 C
Chennai
Wednesday, Dec 18, 2024
201612211438218147 Bowel disease lung disorder healing guava SECVPF
ஆரோக்கிய உணவு

குடல் நோய், நுரையீரல் கோளாறை குணமாக்கும் கொய்யா

புகை பழக்கம் உடையவர்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

குடல் நோய், நுரையீரல் கோளாறை குணமாக்கும் கொய்யா
நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. கொய்யா இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது.

100 கிராம் கொய்யாப்பழச்சாறில் உள்ள சத்துக்கள்.

நீர் – 76%
மாவுப்பொருள் – 15%
புரதம் – 1.5%
கொழுப்பு – 0.2%
கால்சியம் – 0.01%
பாஸ்பரஸ் – 0.04%
இரும்புச்சத்து – 1 யூனிட்
வைட்டமின் C – 300 யூனிட்

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது கொய்யாப் பழம். சிலருக்கு தொடர்ச்சியாக தலைவலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள ஒருசில குறைபாடுகளால் தலைவலி ஏற்படும். இந்த வலியை நிரந்தரமாக தீர்த்து விடுகிறது கொய்யாப்பழம். இப்பழம் ரத்தத்தை சுத்திகரித்து தலைவலிக்கான மூலகாரணத்தை சரிசெய்து விடுகிறது. இதனால் தீராத தலைவலியால் அவதிப்படுவோர் கொய்யாப்பழத்தை நிறைய சாப்பிடலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியபங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும். கொய்யாப்பழம் ரத்தத்தை நன்றாக சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறையும். இந்நோய் வராமலும் தடுத்து விடும். குடல் நோய்களான ஜீரண கோளாறு, பேதி போன்றவற்றை குணப்படுத்தும்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யாவில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது. புகை பழக்கம் உடையவர்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யா சீராக்குகிறது. 201612211438218147 Bowel disease lung disorder healing guava SECVPF

Related posts

அன்னாசி பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கா?அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

சர்க்கரை தித்திப்பான தகவல்கள்…

nathan

ஹீமோகுளோபின் குறைபாடு உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உணவுகள்

nathan

இரவு தூங்கும் முன் 5 உலர் திராட்சை சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்

nathan

வேக வைத்த முட்டைக்கோஸ் நீரை மறந்தும் கொட்டிடாதீங்க!! படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள்

nathan

வெளிநாட்டினரையும் வாயடைக்க வைக்கும் பழைய சோறு… அப்படியென்ன இதுல இருக்குது

nathan

செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளையும் போக்குகிறது.

nathan

மனம் அழுத்தம் மற்றும் சோர்வை போக்க !இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடுங்க

nathan