isto
ஆரோக்கிய உணவு

காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

பொதுவாக காலை உணவு என்பது நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இந்த காலை உணவு தான் நமது உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்ய உதவுகிறது.

இந்த அவசர காலத்தில் நிறைய மக்கள் தங்கள் காலை உணவை உண்பதே கிடையாது.

 

அதனால் வரும் பிரச்சினைகள் குறித்தும் அவர்களிடம் எந்த வித விழிப்புணர்வும் இல்லை. அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் நேரங்களில் ஆரோக்கியமான காலை உணவை உண்ணாமல் பாஸ்ட் புட் போன்ற தீங்கு விளைவிக்கும் உணவுகளையே மக்கள் நாடிச் செல்கின்றனர்.

 

இது பல பக்கவிளைவுகளை உடலுக்கு ஏற்படுத்துவதாக அமைகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

 

காலை உணவு சாப்பிடுபவர்களைவிட, உணவைத் தவிர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 27 சதவிகிதம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

உடல் எடையைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் இடையில் உட்செல்லும் நொறுவைகளும் அதிகமாகும். இதனால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன்மூலம் உடல் எடை உயருமே தவிர, குறைவது கடினம்.
உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் ’டோபமைன்’ ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. இதன் காரணமாக பிறரிடம் எரிச்சல், நிதானமின்மை போன்ற குறிகுணங்கள் போகப் போக வெளியாகத் தொடங்கும்.

உணவைத் தவிர்க்கும்போது, பசியைத் தூண்டக்கூடிய க்ரெலின் ஹார்மோன் மற்றும் ‘சாப்பிட்டது போதும்’ என்ற உணர்வைக் கொடுக்கக்கூடிய லெப்டின் ஹார்மோனின் இயல்பு நிலையிலும் பல மாறுதல்கள் ஏற்படும். லெப்டின் ஹார்மோனின் அளவு குறைந்து, கெர்லின் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும்போது, பசி உணர்வு அவ்வளவு சீக்கிரம் அடங்காது.

Related posts

சீத்தாப்பழத்தின் 10 ஆரோக்கிய நன்மைகள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

முடி உதிர்வை தடுக்கும் முடக்கத்தான் கீரை!!

nathan

40 வயதை நெருங்கி விட்டீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

காலையில் ஒரு துண்டு இஞ்சி உண்ணுவதால் ஏற்படும் நன்மைகள்

nathan

என்றும் இளமை தரும் சர்க்கரை வள்ளி கிழங்கு

nathan

வயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறதா பீன்ஸ்….?

nathan

உடல் சோர்வு அதிகம் உள்ளதா? உணவை தவறாமல் சாப்பிடுங்க!

nathan

எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடாக்கக்கூடாது ?

nathan