26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Healthy Fruits
ஆரோக்கிய உணவு

கட்டாயம் தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த காய்கறிகளை அதிகம் சாப்பிட சொல்வார்கள். ஆனால் அப்படி சாப்பிடும் காய்கறிகளில் சிலர் தோலுரித்துவிட்டு சாப்பிடுவார்கள். இதற்கு காரணம், காய்கறிகள் வெளியே இருப்பதால், அவைகளில் பாக்டீரியாக்கள் மற்றும் இதர கிருமிகள் குடிப்புகுந்திருக்கும் என்று அதனை நீரில் நன்கு கழுவுவதோடு, அதன் தோலை நீக்கிவிடுவார்கள்.

ஆனால் சிலரோ காய்கறிகளை தோலுடன் சாப்பிட்டால் தான் நல்லது என்று சொல்வார்கள். ஏனெனில் காய்கறிகளின் தோல்களில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக ஒருசில காய்கறிகளின் தோல்களில் நார்ச்சத்துக்களும், இதர ஊட்டச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது. அதற்காக தோல் கசப்பாக இருந்தால், அதனை சாப்பிடக்கூடாது. அப்போது அந்த தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். முக்கியமாக இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டு செழிப்பாக விளைய வைத்த ஆர்கானிக் காய்கறிகளை தேர்ந்தெடுத்து வாங்கி சாப்பிட வேண்டும்.

உங்களுக்கு எந்த காய்கறிகளின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும் என்று தெரியவில்லையா? அப்படியெனில், தொடர்ந்து படியுங்கள்.

கேரட்
கேரட்டின் தோலில் தான் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக பீட்டா கரோட்டீன் மற்றும் பீனோலிக் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கேரட்டின் தோலில் தான் உள்ளது. எனவே கேரட்டை எப்போதுமே தோலுடன் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால், இதய நோய், புற்றுநோய், பார்வை கோளாறு போன்றவற்றை சரிசெய்துவிடலாம்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின் கே மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும் உள்ளது. மேலும் வெள்ளரிக்காயின் தோலில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே வெள்ளரிக்காயை தோலுடன் சாப்பிட்டால், மலச்சிக்கல் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம்.

பீட்ரூட்
பீட்ரூட்டின் தோலில் பீட்டாலெயின் என்னும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் உள்ளன. எனவே பீட்ரூட்டின் தோலை நீக்காமல், அதனை துண்டுகளாக்கி, அதில் ஆலிவ் ஆயில் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, வேக வைத்து பிரட்டி சாப்பிட வேண்டும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சமைக்கும் போது பலர் அதன் தோலை நீக்கிவிடுவார்கள். ஆனால் உருளைக்கிழங்கின் தோலில் தான் நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் கே, பொட்டாசியம், காப்பர் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் வளமாக உள்ளது. எனவே இதன் தோலை நீக்கிவிட்டு சமைத்து சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

கத்திரிக்காய்
கத்திரிக்காயின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் உள்ளது. குறிப்பாக ஊதா நிற கத்திரிக்காயில் இந்த சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே கத்திரிக்காய் வாங்கும் போது, ஊதா நிற கத்திரிக்காயை வாங்கி சாப்பிடுங்கள்.
Healthy Fruits

Related posts

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? நீங்களும் முயற்சி செய்யுங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த நேரத்தில் கிரீன் டீ குடிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்தும்!

nathan

பனங்கிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா உருளைக்கிழங்கை யாரெல்லாம் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது..?

nathan

தெரிஞ்சிக்கங்க…விஷமாகும் தேனும் நெய்யும்….. எவ்வளவு சாப்பிடனும் தெரியுமா?

nathan

பப்பாளி விதையுடன் கொஞ்சம் தேன் கலந்து சாப்பிட்டால் இத்தனை நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உடலுக்கு குளுமை தரும் அரைக்கீரை

nathan

ஓட்ஸ் பேரீச்சை பர்ஃபி செய்வது எப்படி?

nathan

அதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்

nathan