choclate smoorthi
எடை குறையஆரோக்கியம்

எடையைக் குறைக்க உதவும் சாக்லேட் ஸ்மூத்தி!…

யாருக்கு தான் சாக்லேட் பிடிக்காது. எந்நேரம் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் தான் சாக்லேட். இனிப்புக்களின் மீது ஒருவருக்கு ஆவல் அதிகரித்தால், அது உடலில் மக்னீசியம் குறைபாடு அல்லது நீர்ச்சத்து குறைபாடு உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

சாக்லேட்டில் டார்க் சாக்லேட் தான் மிகவும் நல்லது. இதுவரை நாம் பல கட்டுரைகளில் இந்த டார்க் சாக்லேட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எனவும், மனநிலையை சிறப்பாக வைத்துக் கொள்ளும் என்றும் பார்த்தோம்.

ஆனால் இந்த டார்க் சாக்லேட் உடல் எடையையும் குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு ஸ்மூத்தி தயாரித்து குடிக்க வேண்டும். சரி, இப்போது அந்த எடையைக் குறைக்க உதவும் சாக்லேட் ஸ்மூத்தியைக் குறித்து காண்போம்.

choclate smoorthi

கொக்கோ பவுடர்/சாக்லேட் ஃப்ளேவர் புரோட்டீன் பவுடர்

கொக்கோ பவுடரில் சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், இதய நோய்களை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் உள்ளன. கொக்கோ பவுடர் சற்று கசப்பாக இருக்கும். ஆனால் சாக்லேட் தயாரிக்கும் போது, அந்த பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் அழிக்கப்படுகிறது. ஆகவே இதன் முழு நன்மையையும் பெற, கொக்கோ பவுடரைக் கொண்டு வீட்டிலேயே ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக் தயாரித்துக் குடியுங்கள்.

பசலைக்கீரை

இந்த ஸ்மூத்தியில் சேர்க்கப்படும் பசலைக்கீரையின் சுவையே தெரியாது. இது இந்த ஸ்மூத்திக்கு ஒரு அடர்த்தியைக் கொடுக்கும். மேலும் இந்த கீரையில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. இது உடலில் நல்ல மனநிலைக்குத் தேவையான செரடோனின் ஹார்மோனின் அளவை அதிகரிக்கும்.

ஆளி விதை

ஆளி விதையும் செரடோனின் உற்பத்தியை ஊக்குவிக்கும். மேலும் இதில் இதய ஆரோக்கியத்திற்குத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. சில ஆய்வுகளில் ஆளி விதை புற்றுநோய் செல்களை அழிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆளி விதையில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவு உயராமல் குறைக்கும்.

சில்லியம் உமி பவுடர் (Psyllium Husk Powder)

இந்த பவுடர் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளும். இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சுத்தம் செய்வதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் பார்த்துக் கொள்ளும்.

இனிப்பு இல்லாத பாதாம் பால்

இது செரடோனின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றொரு பொருள். மெட்டபாலிக் பிரச்சனை உள்ளவர்கள், இதனை தினமும் குடித்து வருவது மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

கொக்கோ பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
சாக்லேட் ப்ளேவர் புரோட்டீன் பவுடர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
பசலைக்கீரை – 1 கையளவு
சில்லியம் உமி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
இனிப்பு இல்லாத பாதாம் பால் – 1 கப்
பாதாம்/முந்திரி வெண்ணெய் – 15 கிராம்
ஆளி விதை பவுடர் – 15 கிராம்

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ப்ளெண்டரில்/மிக்ஸியில் போட்டு, 30 நொடிகள் நன்கு அரைத்தால், பானம் தயார்.

குறிப்பு

இந்த ஸ்மூத்தியை குடிப்பதாக இருந்தால், தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதுவும் குறைந்தது 40 நிமிடம் சற்று கடுமையான உடற்பயிற்சியை செய்து, இந்த ஸ்மூத்தியைக் குடித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

கை, உதடு, வயிறி மற்றும் பின்பகுதி கொழுப்பை குறைப்பதற்கு எப்படி பேக்கிங் சோடா உதவுகிறது

nathan

வாய் துர் நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்!

sangika

இதனால் நிச்சயம் நல்ல தூக்கம் கிடைக்கும்!….

sangika

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவுநோய் பாதிப்பு

nathan

உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்

nathan

கரையானது பற்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடியது…..

sangika

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்

nathan

தொளதொளவென தொங்கும் சதையை, இறுக்கமாக ஆக்குவதற்கான வழிகள்!!!

nathan

உடல் குளிர்ச்சியாக வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!….

sangika