625.500.560.350.160.300
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா குடைமிளகாயை தினமும் உணவில் சேர்ப்பதனால் என்ன பயன்?

நம் முன்னோர்கள் நோய் நொடி இல்லாமல் 100 வருடங்கள் வாழ்வதற்கு அவர்கள் உட்கொண்ட உணவு முறைகளே காரணமாகும்.

அந்த வகையில் குடைமிளகாய் பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்ந்துள்ளது. குடைமிளகாயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் ஆகியவை அதிகம் உள்ளன. அதனால் தான் பெரும்பாலான சைனீஸ் ரெசிபிக்களில் குடைமிளகாய் சேர்க்கப்படுகிறது.

குடைமிளகாயில் வைட்டமின் சி சத்து அதிகமுள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.

குடமிளகாயில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதனைப் பார்ப்போம்.625.500.560.350.160.300

  • குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை கொண்டது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.
  • பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடை மிளகாயை பயன்படுத்தி வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
  • உடல் எடையைக் குறைக்க, குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
  • குடைமிளகாயில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரித்து, தலைமுடி நுனியில் ஏற்படும் பிளவை தடுக்கிறது.
  • கண்பார்வை சிறப்பாக்கவும், இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் குடைமிளகாய் காக்கிறது. குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகிறது.
  • தினமும் இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அஜீரணத்தை விரட்டலாம்.
  • நீரிழிவு நோயிலிருந்து விடுபட இது ஒரு சிறந்த மருந்து. இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் சர்க்கரையின் அளவு குறையும்.

Related posts

வெறும் வயிற்றில் கற்றாழை சாறை குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

nathan

கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி

nathan

சுவையையும் ஆபத்தையும் சேர்த்து தரும் அஜினோமோட்டோ.

nathan

பால் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள்: மிஸ் பண்ணிடாதீங்க!!

nathan

பலாப்பழம் சாப்பிட்டால் உடனே இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

nathan

இந்த அளவிற்கு மேல் உப்பு சாப்பிட்டால் இதயக்கோளாறு வருமாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுங்க

nathan

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி

nathan

உங்களுக்கு தெரியுமா சந்தையில் மீன் வாங்க செல்லும்போது கவனிக்க வேண்டியது என்ன ?

nathan