காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் என்ன குடிக்கலாம், எது நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும், நாள் முழுதும் புத்துணர்ச்சி தரக்கூடியது எது தெரியுமா?
காலை எழுந்ததும் டீ அல்லது காபி குடிப்பது பலர் வழக்கமாக வைத்து உள்ளார்கள். இதற்கு முக்கிய காரணமாக புத்துணர்ச்சி, எனர்ஜி ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சூடான இந்த பாணங்களை விட வெதுவெதுபான தண்ணீர் குடித்தால் நாம் பெறும் நன்மை ஏராளம்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் அமீலத்தை சரிசெய்வது மட்டுமில்லாமல், வயிறும் பாதுகாக்கப்படுகிறது.
வெந்நீர் இல்லாமல் சாதாரண சுத்தமான தண்ணீர் பருகினால் அசிடிட்டி குறைந்து நம் உடலின் ஆற்றல் அதிகப்படும்.
தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதனால் பசி குறையும். உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்கலாம்.
நமது உடலை சீராக வைத்து கொள்வது நமது கடமை. தண்ணீர் அதிகம் குடிப்பதனால் சருமத்தில் உள்ள சுருக்கம், வறட்சி, உண்டாகாமல் பார்த்து கொள்ள முடியும்.
நம் அன்றாடம் சரியாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நமது குடல் இயக்க செயல்பாட்டில் சில மாற்றம் நேர வாய்ப்பு உள்ளது. இதனால் மலம் கழிப்பதில் பாதிப்பு உண்டாகும். காலையில் தண்ணீர் அதிகம் குடித்தால் மலசிக்கல் போன்ற பிரச்னை ஏற்படாது.
தண்ணீர் அதிகம் குடிப்பதனால் சிறுநீரகத்திலுள்ள நச்சுகள் வடிகட்டி வெளியேற்றப்படும். ரத்தத்தில் உள்ள நச்சுளும் போகும். இதனால் உடல் முழுவதும் புத்துணர்ச்சியை பெற உதவும்.