26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
frigh
ஆரோக்கியம் குறிப்புகள்ஆரோக்கிய உணவு

இவற்றை நாம் எப்போதும் செய்து விடுவதே சிறந்தது!

பால்

துரதிர்ஷ்டவசமாக பால் என்னும் ஆரோக்கிய பொருளை ஃப்ரீஜரில் வைப்பது அதன்

தரத்தை மாற்றும். இது சாப்பிட பாதுகாப்பானது என்றாலும் இந்த பாலை காலை நேர காபிக்கோ அல்லது டீக்கோ பயன்படுத்தக்கூடாது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் அதிக நீர்ச்சத்து உள்ளது. ஃப்ரீஜரில் உருளைக்கிழங்கை வைத்து எடுக்கும்போது அது உருளைக்கிழங்கை மென்மையானதாக மாற்றிவிடும். இந்த உருளைக்கிழங்கை சமைக்கும்போது அது உங்களின் உணவின் சுவையை மாற்றும், மேலும் அதில் உள்ள சில சத்துக்களும் வெளியேறுகிறது. பொதுவாக உருளைக்கிழங்கை ப்ரிட்ஜில் வைத்தே சாப்பிடக்கூடாது.

frigh

ஓட்டுடன் உடைய முட்டை

ஓட்டுடன் உடைய முட்டையை ஃப்ரீஜரில் வைப்பது மிகவும் தவறான செயலாகும். முட்டையில் உள்ள நீர்ச்சத்துக்கள் உறையும்போது அதன் பரப்பளவு அதிகரிக்கும், இதனால் முட்டையின் ஓடு உடையவோ அல்லது பாக்டீரியக்கள் தோற்று ஏற்படவோ வாய்ப்புள்ளது. எனவே ஒருபோதும் முட்டையை ஓட்டுடன் ஃப்ரீஜரில் வைக்காதீர்கள்.

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள்

அதிக நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஒருபோதும் ஃப்ரீஜரில் வைக்காதீர்கள். குறிப்பாக வெள்ளரிக்காய், கீரை, தர்பூசணி போன்ற பொருட்களை ஃப்ரீஜரில் வைத்தால் அவற்றில் உள்ள நீர்சத்துகள் ஐஸ்கட்டிகளை உருவாக்கிவிடும். பிறகு அதனை உபயோகப்படுத்தும்போது அதன் உண்மையான சுவையும், வடிவமும் காணாமல் போயிருக்கும். சில சத்துக்களையும் நீங்கள் இழக்க நேரிடும்.

இறைச்சி

ஃப்ரீஜரில் இருந்து எடுத்து சமைத்தது போக மீதமுள்ள இறைச்சியை ஒருபோதும் மீண்டும் ஃப்ரீஜரில் வைக்காதீர்கள். ஏனெனில் அப்படிப்பட்ட இறைச்சிகள் சாதாரண இறைச்சியை விட இரு மடங்கு பாக்டீரியாக்களை ஈர்க்கும். இதற்கு ஒரேவழி தேவைப்படும்போது மட்டும் இறைச்சி வாங்குவதுதான்.

யோகர்ட்

நிபுணர்களின் கருத்துப்படி யோகர்ட் கெட்டுபோவதற்கு முன் அதனை ஃப்ரீஜரில் வைத்து சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. இதில் உள்ள நல்ல செய்தி என்னவென்றால் ஃப்ரீஜரில் வைப்பதால் யோகர்ட்டின் எந்த சத்தும் குறைவதில்லை, ஆனால் அதனை உருகவைக்கும்போது அதன் அமைப்பு மற்றும் க்ரீம் போன்றவற்றை அது இழந்துவிடும். இது உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஃப்ரீஜரில் வைக்கப்பட்ட யோகார்ட்டை விட சாதாரண யோகார்ட்டில் நீர்சத்துகள் அதிகம் இருக்கும்.

சாப்பாடு

சாப்பாட்டை வீணாக்க கூடாது என்பதற்காக அதனை ஃப்ரீஜரில் வைக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால் இது மிகவும் தவறான ஒரு பழக்கமாகும். இதனால் ஆபத்து இல்லையென்றாலும், ஆனால் அந்தத் சாப்பாட்டில் சுவையோ, சத்துக்களோ எதுவும் இருக்காது.

கிரேவி

மீதமான குழம்பை என்ன செய்வது என்ற குழப்பம் பெரும்பாலும் அனைத்து சமையலறையிலும் தோன்றும் ஒரு பிரச்சினையாகும். பிடித்த குழம்பாக இருந்தால் அதனை ஃப்ரீஜரில் வைத்து சாப்பிடும் பழக்கம் கிட்டதட்ட அனைவருக்கும் உள்ள ஒரு பழக்கமாகும். ஃப்ரீஜரை விட்டு எடுத்தபின் அந்த குழம்பு மிகவும் கட்டியாக மாறிவிடும். மேலும் இது சமைத்தபோது இருந்த சுவையுடனும் இருக்காது.

பூண்டு

உணவின் சுவைக்காக சேர்க்கப்படும் பொருள்களில் முக்கியமானது பூண்டு. தேசிய உணவு பாதுகாப்பு மையத்தின் ஆலோசனை படி பூண்டானது ஃப்ரீஜரில் வைக்கப்படும்போது கடிமானதாக மாறிவிடும், மேலும் அதன் சுவை கசப்பு சுவையாக மாறிவிடும். இந்த பூண்டை உணவில் சேர்க்கும்போது அது உணவின் மொத்த சுவையையும் மாற்றக்கூடும்.

சில மசாலாப்பொருட்கள்

ஃப்ரீஜரில் வைப்பதால் உணவின் சுவையை மாற்றுவது பூண்டு மட்டுமல்ல, வெங்காயம், மிளகாய் போன்ற பொருட்களின் சுவையும் கூட மாறக்கூடும். இவை மட்டுமின்றி மிளகு, பச்சை மிளகாய், கிராம்பு போன்ற பொருட்களும் கூட ஃப்ரீஜரில் வைக்கும்போது தன் சுவையை இழக்கக்கூடும்.

Related posts

செல்போன் ‘ஹேங்க்’ ஆவதை தடுக்க!

nathan

பெண்களை பாதிக்கும் அதீத சிந்தனை!தெரிந்துகொள்வோமா?

nathan

அடிக்கடி வரும் குமட்டலில் இருந்து மீள்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… வயிறு தட்டையா ஸ்லிம்மா இருக்கணும்னா இந்த இஞ்சி-சீரகத் தண்ணி குடிங்க!

nathan

கரும்புள்ளிகளை நீக்கும் வீட்டு வைத்தியம்!

nathan

தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்…?

nathan

உங்களுக்கு சீக்கிரமா வயசாகாம இருக்கணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள்

nathan

தக்காளி சாலட்

nathan