10 1507635197 4water
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

இளமையாக இருக்கனுமா? தண்ணீர் விரதம் ஃபாலோ பண்ணுங்க!!

பல மதங்களில் பல சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் அறிவியல் சார்ந்த உண்மைகளும் அடங்கியிருக்கின்றன என்பது இன்று பல ஆராய்ச்சிகளின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. நாம் பாரம்பரியமாக பழகி வந்த பழக்கங்கள் இன்று நம்மியிடையே காணாமலே போனாலும், மீண்டும் அறிவியல் வழியே சில பாரம்பரிய பழக்கங்களை நாம் புதுப்பித்து நடை முறை படுத்தி வருகிறோம் . உலகின் பல இனத்தவரும் கடைபிடிக்கும் ஒரு பழக்கம், விரதம். அவரவர் மதத்தின் கொள்கைகள்படி, முற்றிலும் உணவை தவிர்ப்பது , உப்பில்லாத உணவுகளை மட்டும் உண்ணுவது, மாமிச உணவுகளை விலக்கி வைப்பது என்று ஒவ்வொரு முறைப்படி விரதங்கள் வேறுபடும்.

இந்த விரதத்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. விரதம் இருப்பது என்பது ஒரு சிகிச்சையாக பார்க்கப்படுகிறது. இன்றைய அறிவியல், விரதத்தின் குணமாக்கும் சக்தியை பற்றி பக்கம் பக்கமாக பேசுகின்றன. இதனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர்.

இன்றும் நாம் விரதத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த வகை விரதம் , தண்ணீர் விரதம் என்று கூறப்படுகிறது. தண்ணீரை தவிர வேறு எதுவம் எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் விரதம் என்பதால் இது தண்ணீர் விரதம் . இதன் விளைவுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

எல்லா உயிரினத்துக்கும் தண்ணீர் தான் ஆதாரம். இதற்கான மருத்துவ குணங்கள் ஏராளம் உண்டு. சரும ஆரோக்கியத்திற்கு தண்ணீர் விரதத்தால் ஏற்படும் பலன்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

தண்ணீர் விரதம் என்றால் என்ன? ஜீரணிக்க எந்த உணவும் இல்லாததால், உடல் சேமித்து வைத்திருக்கும் ஆற்றலை குணமாக்கும் வேலைக்கு பயன்படுத்துகிறது அல்லது மற்ற செயல்களுக்கு பயன்படுத்துகிறது. உணவு செரிமான பணி இருக்கும் நேரத்தில், கைவிடப்பட்ட அல்லது மெதுவாக செயல் பட்ட சிகிச்சை நடவடிக்கைகள் விரத காலத்தில் ஊக்குவிக்கப்படுகின்றன. உடல் தன்னை தானே குணமாக்கிக்கொள்ளும் முயற்சியை அதிகரிக்கிறது. தண்ணீர் விரதம் மேற்கொள்ளும்போது உடலில் இருந்து நச்சுக்கள் எளிதில் வெளியேற்றப்படுகிறது.

உடலில் இருக்கும் கொழுப்பு படிவங்களை, சேதமடைந்த மற்றும் இறந்த திசுக்களை மற்றும் கழிவுகளை உடல் வெளியேற்றுகிறது. தழும்பு திசுக்கள், கட்டிகள், இரத்த கட்டிகள் , பழைய காயங்கள் போன்றவை எரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகின்றன அல்லது கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. தண்ணீர், செரிமானம், சீரான இரத்த ஓட்டம், உறிஞ்சும் தன்மை, கழிவு வெளியேற்றம் போன்றவற்றிற்கு உதவியாக இருக்கிறது. சருமம் அணுக்களால் உண்டாக்கப்பட்டது. சருமத்தில் இருக்கும் அணுக்கள் தண்ணீரால் ஆனவை. தண்ணீர் இல்லாமல் அணுக்களால் சிறப்பான செயலாற்றலை வழங்க முடியாது. சரியான அளவு தண்ணீர் சருமத்தில் இல்லாவிட்டால், சருமம் வறண்டு, இறுக்கமாகும். வறண்ட சருமம் எளிதில் சுருக்கத்தை தோற்றுவிக்கும். போதுமான அளவு தண்ணீர் பருகும்போது, உடல் நீர்ச்சத்தோடு இருந்து சுருக்கங்களை தவிர்த்து, வயது முதிர்வை தாமதப்படுத்தும் .

நச்சுக்களை வெளியேற்றும்: பெரியவர்கள் ஒரு நாளைக்கு 8 க்ளாஸ் தண்ணீர் பருக வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் நச்சுகள் வெளியேற்றப்படுகிறது. சரும அணுக்களில் நச்சுக்கள் இல்லாததால் சரும ஆரோக்கியம் அதிகரிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிப்பதால் சருமம் பொலிவாக இருக்கும்.

வயது முதிர்வு தடுக்கப்படும்: நீர்ச்சத்து வயது முதிர்வை தடுக்கிறது என்பது பற்றிய ஒரு ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. அதன் முடிவுகள், அதிக அளவு தண்ணீர் பருகுவதால் ஒரு மனிதனின் சருமத்தில் நேர்மறை விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

பருக்கள் வேகமாக குறைகிறது: தண்ணீர் அதிகம் குடிப்பதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. விரதம் இருப்பதால் சரும நிறத்தில் அதிக முன்னேற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. சருமம் நீர்ச்சத்துடன் இருப்பதால் தன்னைத்தானே புதுப்பித்து கொள்கிறது. தண்ணீர் மட்டும் அருந்தி விரதம் இருப்பதால், சருமத்தில் உள்ள தழும்புகள் குணமாக்கப்பட்டு தோல் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. பருக்கள், கட்டிகள் போன்றவை எளிதில் குணமாகின்றன.

முன்னெச்சரிக்கை: தண்ணீர் விரதம் மேற்கொள்ளும்போது உடலில் பசி மற்றும் சோர்வால் பல அசௌகரியங்கள் உண்டாகும். முதல் ஓரிரு நாட்கள் பசியின் தாக்கத்தால் தலைவலி ஏற்படலாம். 2 நாட்களுக்கு பிறகு உடல் இந்த விரத முறையை ஏற்றுக்கொண்டு , அசௌகரியங்கள் குறையும். நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு இந்த சில நாள் அசௌகரியங்களை பொறுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர் விரதத்தை தொடர்ந்து அதிக நாட்கள் முயற்சிப்பதால் வளர்சிதை மாற்றம் தாமதமாகும் . ஆகவே ஒரு முறை 3 நாட்களுக்கு மேல் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டாம். பொறுமையோடு காத்திருங்கள். உங்கள் சருமம் விரைவில் ஆரோக்கியமாகும்.

10 1507635197 4water

Related posts

தினமும் சோற்றுக் கற்றாழை……

sangika

சோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த விநோதம் நிகழும்!…

sangika

இந்த 5 பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிக்கவே மாட்டாங்களாம்.. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கசக்கும் வேப்பிலையின் இனிக்கும் நன்மைகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா

nathan

சுவையான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

nathan

ஆய்வில் தகவல்! வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் 50% இரத்த சர்க்கரை அளவு குறையுமாம்..

nathan

இத தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க… தூக்கம் வராம அவஸ்தைப்படுறீங்களா?

nathan

மாமியார்-மருமகள் ஒற்றுமைக்கு…பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan