25.6 C
Chennai
Sunday, Dec 15, 2024
cover 1661328637
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த 5 ராசி ஆண்கள் பெண்களை கவர்வதில் மன்மதனாக இருப்பார்களாம்…

பெண்களை ஈர்ப்பது எளிதான காரியம் அல்ல. பெண்களை கவர சரியான நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். உங்கள் வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுங்கள் மற்றும் எல்லை மீறாதீர்கள். பல விஷயங்களைச் சரியாகப் பெறுவதற்கு அதிக முயற்சியும் பொறுமையும் தேவை.

இந்த நுட்பத்தில் சிலரே திறமையானவர்கள். இவர்களால் எப்படி அனைவரையும் கவர முடிந்தது என்று நீங்கள் வியக்கலாம் இந்த பதிவில் எந்த ராசிக்காரர்கள் பெண்களை கவர்வதில் வல்லவர்கள் என்று பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும், கடலை போடுவதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். அது அவர்களுக்கு இயல்பாகவே வரும். அவர்கள் ஒரே பெண்ணுடன் நீண்ட நேரம் செலவழிக்க மாட்டார்கள், ஆனால் அந்த குறுகிய காலத்திலேயே அவர்களால் மறக்க முடியாத நபராக மாறிவிடுவார்கள். குறுகிய பயணத்தைக் கூட சுவாரஸ்யமாக்குவதற்கும், வேடிக்கையாக்குவதற்கும் எல்லா தந்திரங்களும் அவர்களுக்குத் தெரியும். இந்த இராசி அடையாளத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், அவர்கள் தங்கள் திறன் மூலம் மற்ற நபரைக் கவர மிகவும் கடினமாக முயற்சி செய்ய வேண்டியதில்லை. அவர்கள் அதை மிகவும் சிறப்பாக செய்கிறார்கள். தன்னம்பிக்கையைத் தூண்டுவது மற்றும் மக்கள் அவற்றைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது ஆகியவை மேஷ ராசி ஆண்களின் சில கவர்ச்சியான பண்புகளாகும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் கலகலப்பானவர்கள். அவர்கள் திறந்த மனதுடன் இருக்கிறார்கள், இதனால் Flirt செய்வது அவர்களுக்கு மிகவும் எளிதானது. ஒருவருடன் கடலை போடும்போது அவர்கள் தயங்க மாட்டார்கள் அல்லது சிந்திக்க மாட்டார்கள். மிதுன ராசி ஆண்கள் மற்றவர்களுடன் அதிகமாக பழகுவதை நீங்கள் எப்போதும் காண முடியாது. அவர்கள் தங்கள் நகர்வைச் செய்வதற்கு முன்பு மக்களைப் பகுப்பாய்வு செய்கிறார்கள், ஏனெனில் ஒரு நபர் அவர்களின் பேச்சாற்றலுக்கு எவ்வாறு பிரதிபலிப்பார் என்பதை அறிவது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. சரியான வார்த்தைகளை எப்படி பயன்படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியும், மேலும் அவர்களின் உடல் மொழியும் பொருத்தமானதாகவே இருக்கும். கடலை போடும்போது எதிரில் இருப்பவரை நபரை எப்படி ஆர்வமாக வைத்திருப்பது என்பதை மிதுன ராசிக்காரர்களிடம் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

சிம்மம்

சிம்மம் வலிமையான ராசிகளில் ஒன்று. அவர்கள் மற்றவர்களை பின்பற்றுவதை வெறுக்கிறார்கள் மற்றும் அவர்கள் செய்யும் அனைத்தும் அவர்களின் சொந்த முயற்சியாக இருக்கும். எனவே அவர்கள் உங்களிடம் பேசும்போது அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானதாக இருக்கும். அவர்கள் எந்த பிக்-அப் லைனையும் தேர்ந்தெடுத்து எதிரில் இருப்பவரை ஈர்க்க முடியும். இது அனைத்தும் அவர்களின் டைமிங் மற்றும் அவர்கள் பிக்-அப் லைனைப் பயன்படுத்தும் விதத்தில் உள்ளது. அவர்களிடம் இருக்கும் சிறப்பு குணம் என்னவெனில் அவர்கள் சொல்லும் வார்த்தைகள் நிச்சயம் பெண்களின் முகத்தில் புன்னகையைக் கொண்டு வரும். சிம்ம ராசிக்காரர்கள் யாரையும் கவரக் கூடியவர்களாக இருந்தாலும் அவர்கள் சிறந்த துணையாக இருப்பார்கள், ஒருபோதும் மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாட மாட்டார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அழகான உடல் அம்சங்களுடன் பிறந்தவர்களாக அறியப்படுகிறார்கள். அவர்களிடமிருந்து ஒரு புன்னகை போதும், மற்றவர்களை பலவீனமாக்க. அவர்கள் எப்போதும் மிகவும் ரொமாண்டிக் நபர்களில் ஒருவர் மற்றும் அவர்கள் அழகான சுவாரஸ்யமான உரையாடல்களை உருவாக்கக் கூடியவர்கள். நீங்கள் அவர்களின் கவனத்தை ஈர்க்க முடிந்தால், அவர்கள் உங்களை சிறப்பாக உணர வைக்கக் கூடிய அனைத்தையும் செய்வார்கள். கவர்ச்சியான தொடுதலுடன் சரியான நகைச்சுவை உணர்வு அவர்களின் பொதுவான பண்பு. பிக்-அப் லைன்களை எப்போது பயன்படுத்த வேண்டும், எப்போது காதல் சைகைகளை காட்ட வேண்டும், எப்போது தொட வேண்டும், எப்போது நகைச்சுவையாக பேச வேண்டும் என்பதை துலாம் ராசிக்காரர்கள் நன்கு அறிவார். பெண்களை கவர்வதில் அவர்களை மிஸ்டர். பர்பெக்ட் என்றே கூறலாம்.

 

மீனம்

மீன ராசிக்காரர்கள் பொதுவாக கூச்ச சுபாவம் உள்ளவர்கள். அவர்கள் எப்படி மற்றவர்களை கவர்வார்கள் என்று உங்களுக்குள் கேள்வி எழலாம்? ஆனால் அவர்கள் அந்த வேலையை சிறப்பாகவே செய்வார்கள். அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அவர்கள் எப்படி மற்றவர்களை கவரக் கூடியவர்கள் என்பது தெரியும். அவர்களிடம் இருக்கும் சிறப்பு அம்சமே அவர்கள் மிகவும் மர்மமானவர்கள் மற்றும் அது மற்றவர்களை மிகவும் ஆர்வப்படுத்துகின்றன. இது அவர்களை கவர்ந்திழுக்கிறது மற்றும் மக்கள் அவர்களைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறார்கள். அவர்கள் Flirt செய்யும்போது அவர்கள் உங்களை கற்பனையான ஆனால் அழகான சூழ்நிலைகளுக்கு அழைத்துச் செல்வார்கள். அதிலிருந்து நீங்கள் மீண்டு வர நீண்ட நேரமாகும்.

Related posts

எப்பவும் குளிர்ற மாதிரியே இருக்கா?…இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

அழகுக்கு அழகு சேர்க்க

nathan

பத்திரமா இருந்துக்கோங்க…! இந்த கனவு வருவது உங்களுக்கு வரப்போற ஆபத்துக்கான எச்சரிக்கை மணியாகும்…

nathan

அதிகாலை எழுதவதன் 5 பயன்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க ராசிக்கு எந்த கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் நிலைக்கும் தெரியுமா?

nathan

நீங்கள் அதிக நேரம் சேரிலேயே உட்காந்திருக்கீங்களா? அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தையை இரகசியமாக கண்காணிப்பாதல் எத்தனை தீமைகள் உண்டாகும் என தெரியுமா?

nathan

தினமும் காலையில் தண்ணீர் தேவையான அளவு தொடர்ந்து குடித்து வந்தால்…

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தைகள் திக்கி திக்கி பேச இவையெல்லாம் தான் காரணமாம்..

nathan