25.2 C
Chennai
Monday, Dec 16, 2024
blackthreadinhand
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த ராசிக்காரங்களாம் கருப்பு கயிற்றை கையில் கட்டக்கூடாது..

நம் இந்திய நாட்டு மக்களிடையே பல நம்பிக்கைகள் உள்ளன. அதில், கறுப்புக் கயிறுகளால் கைகால்களை சுற்றிக் கொண்டு பெரும்பாலானவர்களைக் காணலாம். சிலர் கழுத்தில் கறுப்பு கயிற்றையும் கட்டுவார்கள். கருப்பு கயிறு தீய சக்திகளை விரட்டும் என்று நம்பப்படுகிறது. அதே சமயம் கருப்பு கயிறு கட்டினால் கெட்ட சக்திகள் விலகி நிற்கும்.

ஆனால் கருப்பு கயிறு அனைவருக்கும் பொருந்தாது என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த ராசிக்காரர்கள் யார், மற்ற எந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றை கட்டலாம் என்பதை தொடர்ந்து படியுங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் பகவானுக்கு கருப்பு நிறம் ஆகாது. இம்மாதிரியான சூழ்நிலையில், மேஷ ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றினை கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை மேஷ ராசிக்காரர்கள் கருப்பு நிற கயிற்றினைக் கைகளில் கட்டினால், ஏதாவது தோஷம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய். மேஷ ராசிக்காரர்களைப் போன்றே விருச்சிக ராசிக்காரர்களும் கருப்பு நிற கயிற்றை கை, கால்களில் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவேளை இந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றினைக் கட்டினால், செவ்வாய் பகவானால் கிடைக்கும் நற்பலன்கள் தடைபட்டு, பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கருப்பு கயிற்றினை எந்த ராசிக்காரர்கள் அணியலாம்?

துலாம்

துலாம் ராசி என்பது சனி பகவானின் உயர்ந்த அடையாளமாகும். கருப்பு நிறம் சனி பகவானுக்கு உரிய நிறம். ஆகவே துலாம் ராசிக்காரர்கள் கருப்பு நிற கயிற்றினை கைகளில் கட்டுவது நல்லதாக கருதப்படுகிறது. இதனால் வறுமை நீங்கி, வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவானை அதிபதியாக கொண்டிருப்பதால் மகர ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றினை கட்டுவது மங்களகரமானதாக கூறப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றினை கையிலோ, காலிலோ கட்டினால், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள் நீங்கி, மகிழ்ச்சி பெருரும்.

கும்பம்

கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான் என்பதால் கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் கருப்பு கயிற்றினை கை, கால்களில் கட்டுவது நல்லது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதன் மூலம் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை சந்தோஷமாகவும், பிரச்சனைகளின்றியும் இருக்கும்.

Related posts

இந்த உணவுகளை மட்டும் அதிகமாக எடுத்துக்காதீங்க

nathan

தேவையற்ற கொழுப்பை கரைத்து, உடலை ஃபிட்டாக்க உடற்பயிற்சி!…

nathan

உங்களுக்கு தெரியுமா கையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் இத்தனை நன்மைகளா….?

nathan

இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழல் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது……

sangika

வறட்டு இருமலை போக்கும் கைமருந்து..!!

nathan

இந்த 5 ராசிக்காரங்க அசைக்க முடியாத மனவலிமை உள்ளவங்க… இது மற்றவர்களை விட அவர்களுக்கு வலிமையைக் கொடுக்கும் ஒன்றாகும்

nathan

கவர்ச்சி கரமான தோற்றம் பெற 3 பயிற்சிகள் இதோ..

nathan

இந்த 6 ராசிக்காரங்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்… தெரிந்துகொள்வோமா?

nathan

இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வியா?

nathan