27 forget2
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த உணவுகளை மட்டும் அதிகமாக எடுத்துக்காதீங்க

தற்போதைய காலக்கட்டத்தில் உடலுக்கு சத்தான உணவுகளை தவிர்த்துவிட்டு பாஸ்ட் புட் உணவுகளுக்கு பலரும் அடிமையாக உள்ளனர். இது போன்ற உணவுகளால் உடற்பருமனில் துவங்கி, எல்லா வகையான வியாதிகளும் வரிசைகட்டி நிற்கின்றன. மருத்துவ ஆய்வு ஒன்றி சில வகை உணவுகளை உட்கொள்வதால் அறிவு மழுங்குகிறது எனவும் மறதி அதிகரிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது.

இனிப்பு வகைகள்
இனிப்பு பதார்த்தங்கள், பல வியாதிகளை உடலுக்கு கொண்டு வருகின்றன. மூளை, ஞாபக சக்தி ஆகியவற்றை கெடுக்கிறது. இனிப்பை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு கற்பதில் குறைபாடு உண்டாகிறது.

இனிப்பினால் சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேற்கூறிய வியாதிகள் அனைத்தும் வருகின்றன. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள், செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது நலம்.

ஜங் உணவுகள்
ஜங் புட்’களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதட்டம், உடற்பருமன் ஏற்படுகிறது என தெரிய வந்துள்ளது.

வறுத்த உணவுகள்
வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப்பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நரம்பு செல்களை மெதுவாக பாதித்து அழிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஏற்கனவே சமைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன. வறுத்த உணவுகளால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இதிலும் ஏற்படுகின்றன. இந்த வகை உணவுகள் உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இதனால் அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

கொழுப்பு
அறிவை மழுங்கடிக்கும் உணவுகளில் முதன்மையானது கொழுப்புகள். அதிக உடல் எடை மற்றும் இதய நோய்களுக்கு முக்கிய காரணம் கொழுப்பு உணவுகளே. எனவே கொழுப்பு எந்த வடிவத்திலிருந்தாலும் அதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு, மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகவும், மூளையை சுருங்கவும் செய்கிறது. உடலுக்கு அனைத்து வகையான தீங்குகளையும் கொண்டு வருகிறது.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்!

nathan

தண்ணீரை சேமித்து வைக்க நீங்கள் பிளாஸ்டிக் மற்றும் எவர் சில்வரை பயன்படுத்துவது சரியா?

nathan

இது தான் வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று சொல்வாங்களா?

nathan

நீரழிவின் எதிரி செர்ரி

nathan

காலை உணவைத் தவிர்த்தால் எடை குறையுமா?

nathan

இந்த பிரச்சனை இருந்தா இளநீர் குடிக்காதீங்க?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா நல்ல தூக்கம் நல்ல அறிவைக் கொடுக்கும்.

nathan

இப்படி தூங்கினால் அப்படி இருப்பீர்கள்!

nathan

இத படிங்க தாய்ப்பாலூட்டும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

nathan