பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களின் வரிசையில் மார்பகப் புற்றுநோய்தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில், 2018-ம் ஆண்டு மட்டும் 1,62,468 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே ஆண்டில் 87,090 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. புற்றுநோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள, அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
மார்பகப் புற்றுநோய்குறித்த சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் 13 கேள்விகள் இங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கு பதிலளிப்பதன்மூலம், இந்தப் புற்றுநோய்குறித்து தெளிவு பெறலாம்.