சூப்பர் உணவுகள் என்றால் என்ன? இளமையை தருவதா? குறிப்பிட்ட உறுப்பிற்கு பலம் தருவதா? விட்டமின், மினரல், புரோட்டின் என உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டம் தருவதுதான் சூப்பர் உணவாகும். எல்லா வித சத்துக்களும் அடங்கியவைகளாக இருக்க வேண்டும். விட்டமின், மினரல், அமினோ அமிலங்கள், ஃபைடோ சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் என எல்லாம் இருக்க வேண்டும்.
உடலின் பாதிப்புகளை சரி செய்ய வேண்டும். அப்படியான உணவுகள் சூப்பர் உணவுகள் ஆகும். அவ்வாறான உணவுகள் எவையெனத் தெரியுமா? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பருவகால உணவுகள் : அந்தந்த பருவத்தில் விளையும் உணவுப் பொருட்கள் மிக அற்புதத்தை உங்கள் உடலுக்கு தருகிறது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் போக்குவரத்து, குளிர்சாதனப் பெட்டி மற்றும் ரசாயன பதப்படுத்தும் பொருட்கள்(chemical preservatives) ஆகியவற்றால் எல்லா உணவுப் பொருட்களும் எல்லா பருவத்திலும் கிடைக்கின்றன. அவைகளிலுள்ள ராசயனம் உடலுக்கு தீமையை விளைவிக்கும். குறைவான நேரத்தில் அதிக லாபம் செய்ய சில சுய நல வணிக அமைப்புகள் செய்யும் தந்திரம். இதனால் ஒட்டுமொத்த மனித உயிருக்கே தீராத தலைவலி உண்டாக்கும் என்பதை காலம் கடந்து உணர்வார்கள் என்பதில் ஐயமில்லை. குளிர் மற்றும் மழைகாலத்தில் நுரையீரலில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். எனவே இதற்கேற்ற உணவு எது என தெரிந்து கொள்ளுங்கள்.
இஞ்சி, பூண்டு மற்றும் முள்ளங்கி : இவை இந்த பருவத்தில் அதிக விளையும். இவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் நுரையீரல் பலப்படும். குளிர்கால நுரையீரல் தொற்று உண்டாகாது.
கேரட், கொத்துமல்லி மற்றும் இஞ்சி ஜூஸ் : இந்த பொருள்களை சாறு எடுத்து குடியுங்கள். கேரட் மற்றும் கொத்துமல்லியை சம அளவு எடுத்து சிறிய இஞ்சித் துண்டை போட்டு ஜூஸ் தயாரிக்க வேண்டும். இது சக்தியையும் உடல் அசதியையும் போகுகிறது.
மாதுளை : இந்த பருவத்தில் அதிகம் கிடைக்கக் கூடிய பழம். இதனை சாப்பிடுவதால் பல மருத்துவ ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.
பட்டாணி : பட்டாணியில் வெறும் புரதம் மட்டும் இருக்கிறது என நினைத்துவிடாதீர்கள். விட்டமின் கே, சி, ஏ, இரும்பு, கால்சியம், காப்பர், பொட்டாசியம் என பலவிதமான சத்துக்கள் உள்ளது. இது குளிர்காலத்தில் நுரையீரலில் உண்டாகும் அலர்ஜியை தடுக்கிறது.
பசலைக் கீரை : இதில் பலவித அற்புதமான சத்துக்கள் இருக்கிறது. 30 வகையான ஃப்ளேவினாய்டு கொண்டுள்ளது. புற்று நோயை தடுக்கிறது. தினமும் சேர்த்துக் கொண்டால் ஜலதொஷம் காய்ச்சல் உங்களை நெருங்காது.
கொய்யா : கிவி ஒரு சூப்பர் உணவு என்று அமெரிக்காவில் எல்லாரும் கொண்டாடி அதனை சாப்பிடுவார்கள். ஆனால் கிவி எல்லா நாட்டிலும் கிடைப்பதில்லை. அதற்கு ஈடான ஒரு பழம்தான் கொய்யா. கிவியில் எத்தனை சத்துக்களோ அததனையும் கொய்யாவிலும் இருக்கிறது. இதனையும் உங்கள் சூப்பர் உணவில் சேர்த்திடுங்கள்.