24.9 C
Chennai
Tuesday, Dec 17, 2024
01 1438428993 6
ஆரோக்கிய உணவு

ஆளி விதை பற்றிய அற்புதமான 5 உண்மைகள்!!!

ஆளி விதையானது சக்தி நிறைந்த முழு நன்மை குணங்களைக் கொண்ட விதையாகும். இந்த விதை பண்டைய நாகரீகங்கள் மற்றும் கலாச்சாரங்கள் மூலம் அக்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எகிப்தில் நெபெர்டிடி காலத்திலிருந்தே ஆளி விதை பயன்படுத்தப்பட்டு வந்ததாக தொல்பொருள் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய ஆளி விதையை இந்தியாவில் விவசாயம் செய்வோர் அதிகம் உட்கொண்டு வந்தனர். சரி, இப்போது அந்த ஆளி விதையைப் பற்றி அற்புதமான உண்மைகளைப் பார்ப்போம்.

சீரான உடல் சூடு இந்த விதை ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மருத்துவத்திற்கும் பயன்படுகின்றது. ஆளி விதை கொழுப்பை குறைக்கும் என அறியப்படுகிறது. ஆளி விதைகள் உடலுக்கு வெப்பம் அளிக்கின்றன. இதில் ஒரு என்ன விசித்திரம் என்றால் இந்த விதையை பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நாம் முழுதாக எடுத்து கொண்டால், நம் உடலால் அதனை செரிக்க இயலாது. எனவே பொடி செய்து, போதுமான அளவு நீருடன் எடுத்துக் கொள்ள வேண்டும். திரவங்களை அதிகமாக உட்கொள்ளவும். ஆளி விதை எடுத்துக் கொள்ளும் அளவு, நீங்கள் உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தது. வறுக்கும் போது இந்த விதைகள் மொறுமொறுப்பான மற்றும் சுவையாக இருக்கின்றன.

வளமான ஒமேகா-3 இரண்டு தேக்கரண்டி ஆளி விதை தரும் சிறந்த பரிசு குறுகிய சங்கிலி ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். உங்கள் ஆர்வம் அல்லது உங்கள் தேர்வு எதுவாக இருந்தாலும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல செய்தியையே தரும். பொதுவாக இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீன் எண்ணெய்யில் உள்ளன.

இதய நோய், மூட்டு வலி, ஆஸ்துமா, நீரிழிவு சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இயற்கை கொடுத்திருக்கும் மற்றொரு வழி ஆளி விதை. இது ஆல்பா லினோயிக் அமிலங்களைக் கொண்டுள்ளது. இந்த அமிலம் நாள்பட்ட இதய நோய், மூட்டுவலி, ஆஸ்துமா, நீரிழிவு நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும். மேலும் இது பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக உங்கள் உடல் பாதுகாக்க உதவுகிறது. அதிலும் வால்நட், மீன், மற்றும் ஆளி விதைகளை ஒன்றாக உட்கொண்டால் பலன் நிச்சயம்.

கொழுப்பைக் குறைக்கும் அதிக நார்ச்சத்து கொண்ட ஆளி விதை கொழுப்பைக் குறைக்க பயன்படுகின்றது. அதிக நார்சத்துள்ள உணவுகள் உங்களை முழுமையாக உணர செய்வதால் நீங்கள் மேலும் உண்ண விரும்பமாட்டீர்கள். உங்கள் இரத்த சர்க்கரை அளவு நிலையாகும் மற்றும் குடல்கள் நன்கு செயல்படும்.

புற்றுநோய் மற்றும் கருத்தரிப்பு பிரச்சனைகள் நீங்கும் ஆன்டி- ஆக்ஸிடன்ட் மற்றும் பைட்டோ-கெமிக்கல் போன்றவை ஆளி விதையில் வளமாக உள்ளது. இதனால் இவை கருத்தரிப்பு பிரச்சனைகளை நீக்குவது, மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பது மற்றும் இறுதி மாதவிடாய்க்கான அறிகுறிகளைக் குறைக்க பயன்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு ஆளி விதையின் முழு பலன்களை, மருத்துவர் மற்றும் விலையுயர்ந்த மருந்துகளின் உதவி இல்லாமலே அனுபவியுங்கள். இது உங்கள் உள்ளூர் சூப்பர் மார்க்கெட் அல்லது சாலையோர பலசரக்கு கடைகளில் கிடைக்கும்.

01 1438428993 6

Related posts

Tips.. பலாப்பழ பிரியர்கள் இதனை படிக்கவும்..

nathan

தினமும் குங்குமப்பூ நீர் குடிங்க, அப்புறம் பாருங்க என்னலாம் நடக்குதுன்னு..!

nathan

சரும ஆரோக்கியத்தை மீட்க செயற்கை க்ரீம்கள் வேண்டாம் இந்த பழங்களே போதுமாம்…! தெரிஞ்சிக்கங்க…

nathan

தினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அற்புத உணவு காளான்!

nathan

பூசணிக்காயை விரும்பி சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது? மீறி வைத்தால்..!?

nathan

தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது ஆரோக்கியமானதா?

nathan

கொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்

nathan