25.7 C
Chennai
Saturday, Dec 14, 2024
4 stress
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் பிறப்பு மற்றும் வளர்ப்பில் தந்தையின் பங்கு மிக முக்கியமானதா?

இந்த உலகில் உங்களுக்கு கடவுள் கொடுத்த மிக முக்கியமான கொடை என்பது உங்களுடைய குழந்தையே. கடவுளின் பங்கு என்பது உங்களுக்கு குழந்தையை கொடுப்பதுடன் முடிவடைந்து விடுகின்றது. அந்தக் குழந்தை நல்ல உடல் மற்றும் மன அரோக்கியத்துடன் இந்த பூமிக்கு வருவதில் பெற்றோருடைய பங்கே மிக முக்கியமானது.

அதிலும் ஒரு குழந்தையின் தந்தை தன் வாழ்நாளில் புரிந்த அனைத்து செயல்களும் இன்னும் பிறக்காத குழந்தையை கண்டிப்பாக பாதிக்கும். என்ன நான் கூறுவது மிகவும் ஆச்சரியமாக உள்ளதா?. சரி, சமீபத்திய ஆய்வுகள், கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தாய் மட்டுமே பொறுப்பல்ல. தந்தையும் சம பங்கு வகிக்கின்றார் என நிரூபித்துள்ளன.

நீங்கள் ஒரு நிமிடம் இந்த உண்மையை உற்று நோக்கினால், ஆணின் விந்து செல்களில் 10 லட்சத்தில் ஒன்று பெண்ணின் கரு முட்டையில் நுழைந்து அதை கருவுறக் செய்கின்றது என்பது உங்களுக்கு நினைவுக்கு வரும். இந்த விந்து செல்களே டிஎன்ஏ எனப்படும் மனிதனின் முழு மரபணுத் தொகுப்பைத் தன்னுள் கொண்டுள்ளது. எனவே, குழந்தையின் பண்புகள் மற்றும் புறத்தோற்றத்தில் தந்தை 90 சதவீதம் பங்கு வகிக்கின்றார் என்பது உங்களுக்கு புரியும்.

இந்த உண்மை தொடர்பாக, நிபுணர்கள் தந்தைகளை தங்களுடைய வாழ்க்கை முறைப் பற்றி கவனம் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றார்கள். ஆண்களின் குடிப்பழக்கம், போதை, புகை மற்றும் ஒரு ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை தாயின் கருவறையில் உள்ள சிசுவிற்கு கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தக் கட்டுரையில் உங்களுடைய தவறான மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் குழந்தையை எப்படி பாதிக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

புகைப்பழக்கம்

புகைப் பழக்கத்திற்கு ஆளான ஆண்கள், தங்களுடைய பிறக்காத குழந்தைக்கு ஆஸ்துமாவை பரிசாக அளிக்கின்றனர். அவர்கள் தங்களுடைய புகைப்பழக்கத்தை வெகு காலத்திற்கு முன்பே விட்டிருந்தாலும், அது கருவில் உள்ள குழந்தையை கண்டிப்பாக பாதிக்கும். இதிலிருந்து புகைப்பழக்கத்தின் தீமையை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். எனவே, நீங்கள் உங்களுடைய குடும்பத்தை உருவாக்க திட்டமிடும் முன், இந்த பழக்கத்தை விட்டொழிப்பது மிகக் சிறந்தது.

 

மது

ஒரு தந்தை குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் பொழுது, அவர் தன்னுடைய இன்னும் பிறக்காத குழந்தையை அதிக ஆபத்திற்கு உட்படுத்துகின்றார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஒரு தந்தை ஆல்கஹாலைத் தொடும் பொழுது, தன்னுடைய பிறக்காத குழந்தையின் உருவ அமைப்பு, வளர்ச்சி மந்தம் மற்றும் நடத்தை முரண்பாடுகள் போன்றவற்றிற்கு தன்னை அறியாமலே காரணமாகின்றார்.

 

போதை அடிமை

ஆண்கள் எடுத்து வரும் போதை மருந்துகள் தாயின் கருவறையில் உள்ள கருவில் அதிக விளைவை ஏற்படுத்துகின்றது. இது போதை மருந்தின் வகையைப் பொறுத்து மாறுபடும். மருந்துகள் கருவில் உள்ள குழந்தைக்கு அதிக சிக்கல்களை உண்டாக்கும் அதே வேளையில் தாய்க்கும் பாதிப்பை உருவாக்குகின்றது.

 

மன அழுத்தம் மிகப்பெரிய கொலையாளி

நவீன கால சூழலில், மன அழுத்தம் நம் வாழ்வில் மிக முக்கியப் பங்காற்றுவதாக தெரிகிறது. மன அழுத்தம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்; ஒரு வேளை பெண் கருவுற்றாலும், தந்தையின் மன அழுத்தம் காரணமாக அந்த தாய்க்கு கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

தவறான உணவுப் பழக்கம்

உணவில் சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வது உண்மையில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். தவறான உணவுப் பழக்கம் கருவில் உள்ள குழதையின் வளர்ச்சியைப் பாதிப்பதுடன் அந்த தாயக்கும் தீமையை விளைவிக்கும்.

உங்களுடைய பனிச்சூழல்

பணியிடத்தில் இரசாயனங்கள் மற்றும் தீய விளைவுகளை வெளிப்படுத்தும் பொருட்களை கையாளும் தந்தைகள் கண்டிப்பாக குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கக் காரணமாகின்றனர். கலைஞர்கள், துப்புரவு தொழிலாளர்கள், முடி திருத்துவோர், விஞ்ஞானிகள், வெல்டர்கள், உலோக மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிலாளர்கள் போன்றவர்கள் பாதிக்கப்பட அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை

மொத்தத்தில், ஒரு தந்தையின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியைப் பாதிக்கின்றது. ஆகவே நீங்கள் ஒரு நல்ல தந்தையாக விளங்க வேண்டும் எனில், உங்களுடைய உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களை முழு அளவில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும. நீங்கள் எப்பொழுதும் மனதில் நேர்மறையான எண்ணத்துடன் இருப்பது இந்த உலகத்திற்கு ஒரு ஆரோக்கியமான குழந்தையைக் கொடுக்கும். எனவே இந்த சமுகத்திற்கு உங்களால் இயன்ற நன்மையை செய்யுங்கள்.

Related posts

குடிப்பழக்கத்தை விட்டவுடன் இதெல்லாம் நடக்கும் நம்புங்க!!

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயாளிகள் மக்காச்சோளம் ஏன் சாப்பிடக்கூடாது..!

nathan

வாய் புண்களை குணப்படுத்தும் சூப்பர் டிப்ஸ்…

nathan

சுவையான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

nathan

பெண்களே வீட்டிற்கான அவசியமான மழைக்கால பராமரிப்புகள்

nathan

தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன!….

sangika

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்தைப் பெற எளிய வழி இதோ

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

nathan

அதிகரிக்கும் நொறுக்குத்தீனி மோகம்

nathan