8 jigardhanda
பழரச வகைகள்

ஜில்.. ஜில்.. ஜிகர்தண்டா

மதுரையில் மல்லிக்கு அடுத்தபடியான பிரலமானது தான் ஜிகர்தண்டா. இதனை சாப்பிடவே பலரும் மதுரைக்கு செல்வார்கள். அதிலும் இதனை கோடையில் சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். ஆனால் இதனை எப்படி செய்வதென்று பலருக்கும் தெரியாது.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டாவை எப்படி ஈஸியாக செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

Madurai Special Jil Jil Jigarthanda
தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்
நன்னாரி சிரப் – 3-4 டேபிள் ஸ்பூன்
பாதாம் பிசின் – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1/2 கப்
பிரஷ் க்ரீம் – 1/2 கப்
பால் கோவா – 2 டேபிள் ஸ்பூன்
வென்னிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி, குறைவான தீயில் 10 நிமிடம் சுண்டும் வரை காய்ச்சவும்.

பின் அதில் சர்க்கரை சேர்த்து, குறைவான தீயில் மீண்டும் பாதியாக சுண்டும் வர கொதிக்க விட வேண்டும். அதன் நிறம் மாறி பாதியானதும், அதில் 1 கப் பாலை எடுத்து தனியாக குளிர வைக்க வேண்டும்.

பிறகு மீதமுள்ள பாலை மீணடும் 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதில் பால் கோவா சேர்த்து நன்கு கலந்து, பின் அதில் பிரஷ் க்ரீம், வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடித்து, ஒரு டப்பாவில் போட்டு, ப்ரீசரில் 3-4 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். இப்போது அது ஐஸ் கட்டி போன்று இருக்கும். அதனை உடைத்துவிட்டு, மீண்டும் ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும்.

பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, மீண்டும் ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும். இதேப்போன்று 2 முறை ப்ரீசரில் வைத்து உறைய வைத்து எடுத்து அரைத்து, இறுதியில் அதனை ப்ரீசரில் 8 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும்.

அதற்குள் பாதாம் பிசினை ஒரு பௌலில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் பாதாம் பிசின் நன்கு ஊறி ஊதியிருக்கும்.

இறுதியில் ஒரு டம்ளரில் 2 டீஸ்பூன் நன்னாரி சிரப், 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசினி, தனியா எடுத்து வைத்துள்ள பால் டம்ளரில் 3/4 அளவு வரும் வரை ஊற்றி, பின் அதில் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு பரிமாறினால், மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா ரெடி!!!

Related posts

ஆப்பிள் ஜூஸ்

nathan

வைட்டமின் காக்டெய்ல்

nathan

கம்பு ஜூஸ் செய்வது எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika

சூப்பரான இரும்புச்சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி?

nathan

குளு குளு புதினா லஸ்ஸி

nathan

டிராகன் ஃபுரூட் ஜூஸ்

nathan

அன்னாசிப்பழம் பயன்பாடுகள்

nathan

லெமன் பார்லி

nathan

குளுகுளு மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி

nathan