நிறைய பேருக்கு அடி வயிற்றில் தீராத வலி ஏற்படும். இதைத் தொடர்ந்து அவர்கள் காய்ச்சல், குமட்டல் போன்ற பல்வேறு அறிகுறிகளை சந்திப்பர். இந்த அறிகுறிகள் எதனால் ஏற்படுகிறது என்று பலருக்கு தெரிவதில்லை. இதற்கு காரணம் குடல் வால் அழற்சியாக இருக்கலாம்.
நமது பெருங்குடலில் குடல் வால் என்ற சிறிய குழாய் பகுதி காணப்படும். இந்த குடல் வாலில் வீக்கம் ஏற்படுவதைத் தான் நாம் குடல் வால் அழற்சி என்கிறோம். சுமார் 9 சதவீத ஆண்களும் 7 சதவிகித பெண்களும் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த குடல் வால் அழற்சி குறிப்பாக இளம் வயதான 5 – 25 வயதிற்குரியவர்களை அதிகம் தாக்குகிறதாக கூறப்படுகின்றது. இந்த பிரச்சனையில் இருந்து இயற்கையான வழிமுறைகளில் வெளிவருவது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..