28.9 C
Chennai
Monday, May 20, 2024
மருத்துவ குறிப்பு

முதல் வகை நீரிழிவு நோயால் இறப்பதற்கு ஆண்களை விட பெண்களுக்கு 40 சதவீத வாய்ப்பு அதிகம்: ஆய்வு முடிவு

 

முதல் வகை நீரிழிவு நோயால் இறப்பதற்கு ஆண்களை விட பெண்களுக்கு 40 சதவீத வாய்ப்பு அதிகம்: ஆய்வு முடிவு >லண்டன், பிப்.6-

ஒரு காலத்தில் வயதானவர்களிடம் மட்டுமே காணப்பட்ட சர்க்கரை நோய் (நீரிழிவு) இப்போது சிறுவர்களைக் கூட விட்டு வைக்காமல் பாதித்து வருகிறது. இந்த நோயில் முதல் வகை நோய் (டைப் 1 டயாபடீஸ்) சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வருவது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கணையத்தில் இன்சுலின் சுரப்பதில்லை.

உலக அளவில் 15 வயதிற்குட்பட்ட 5,00,000 குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2013-ம் ஆண்டு சர்வதேச டயாபடீஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வின்படி முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்களோடு ஒப்பிடும்போது நோயுற்று இறப்பதற்கான வாய்ப்பு 40 சதவீதம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நோயின் தாக்கத்தால் வாதம் வருவதற்கு 37 சதவீதமும் கிட்னி கோளாறுகளுக்கு 44 சதவீதமும் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மேலும் இதய நோயால் இறக்கும் வாய்ப்பு ஆண்களை விட பெண்களுக்கு இரண்டு மடங்கு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மோசமான ரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் இன்சுலின் சிகிச்சையில் உள்ள சிரமங்கள் போன்ற காரணிகளால், பல பெண்கள் இதய நோய் தொடர்பான மரணங்களை சந்திப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சாதாரணமாக ஆணை விட வலிமையாக இருக்கும் பெண்ணின் பாதுகாப்புத் தன்மையை முதல் வகை நீரிழிவு நோய் குலைத்து விடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்”

Related posts

மூட்டுவலிக்கு தீர்வு. ஆர்த்தோகைன் தெரப்பி!

nathan

படர்தாமரைக்கான சில எளிய கை வைத்தியங்கள்!!! சூப்பரா பலன் தரும்!!

nathan

ஏலக்காய் வாசனைக்கு மட்டுமல்ல உடலிற்கும் எண்ணற்ற நன்மை பயக்க வல்லது…!

nathan

லவ்வர் கூட சண்டையா? இந்த 7 விதிகள் உங்களைக் காப்பாத்தும்!

nathan

நாவூறும் யாழ்ப்பாணத் தோசை செய்முறை விளக்கம்!!!

nathan

ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சையால் இவ்வளவு பலன்களா..!?

nathan

இருமலை கட்டுப்படுத்தும் மாதுளம் பழம்

nathan

கண்புரை என்றால் என்ன?

sangika

பெண்களின் பார்வை பலவிதம்

nathan