27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
kid sleeping
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளை தூங்க வைக்கும் வழிகள்!!!

காலையில் வலிமை மற்றும் ஆற்றல்களுடன் எழுந்திருக்க நல்ல தூக்கம் என்பது அத்தியாவசியமாகும். அதுவும் குழந்தைகள் என்றால் அது இன்னமும் முக்கியம். நினைவுகளையும், பிற அறிவாற்றல் நடவடிக்கைகளையும் ஒன்றுப்படுத்த கனவு முக்கிய பங்கை வகிக்கிறது. வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கையில் இது நடக்கும். அதனால் அதற்கான முக்கியத்துவத்தை நாம் அளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு தங்களின் வயதை பொறுத்து பல்வேறு அளவிலான தூக்கம் தேவைப்படும். பள்ளிக்கு செல்லும் வயதை எட்டாத குழந்தைகளுக்கு தினமும் 10-12 மணி நேர தூக்கம் தேவை. 9 வயதுடைய குழந்தைகளுக்கு 10 மணி நேர தூக்கம் தேவை. பருவமடைந்த குழந்தைகளுக்கு 8-9 மணி நேர தூக்கம் தேவை. ஆனால் பல குழந்தைகள் போதிய நேரம் தூங்குவதில்லை.

பெரும்பாலும் குழந்தைகள் தூங்கும் நேரம் மாறிக்கொண்டே இருக்கும். தீய படுக்கை நேர பழக்கங்களாலேயே இது நடைபெறுகிறது. இதனால் ஹைபர்ஆக்டிவிட்டி, எரிச்சல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் கஷ்டம், அதிகரிக்கும் ஆத்திரம் போன்ற எதிர்மறையான தாக்கங்களை இது உருவாக்கிவிடும். எனவே கீழ்கூறிய ஐடியாக்களை படித்துக் கொண்டு, நல்ல தரமுள்ள தூக்கத்தை குழந்தைகள் பெற உதவிடுங்கள்.

சீரான அட்டவணையை நிறுவுதல்

தினமும் ஒரே நேரத்தில் விழிப்பது முக்கியமான ஒன்றாகும். இதனால் சீரான நேரத்தில் ஓய்வெடுக்க முடியும். இது உங்கள் உடலுக்கும் பழகிவிடும். இதனால் கனவுகளும் கூட வழக்கமாகிவிடும். ஆனால் சனி மற்றும் ஞாயிறுகிழமைகளில் மட்டும் நேரம் கழித்து தூங்கச் செல்லலாம்.

தூக்கம் என்பது ஒரு சடங்கு

தூக்கத்திற்கு தயாராவதை ஒரு மகிழ்ச்சியான சடங்காக பாருங்கள். வெந்நீர் குளியல், நல்ல இசையை கேட்பது, பைஜாமாவை போட்டுக் கொள்ளுதல், மறுநாள் அணிய வேண்டிய ஆடையை எடுத்து வைத்தல், பல் தேய்த்தல் போன்ற நடவடிக்கைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

படுக்க செல்லும் முன் அமைதியான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்

படுக்க செல்வதற்கு முன் ஒரு புத்தகத்தை படித்து தூக்கத்தை வசதியாக்கிக் கொள்ளுங்கள். அவர்களை வீடியோ கேம்ஸ் அல்லது தொலைக்காட்சி போன்ற குதூகலப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபட விடாதீர்கள். அதே போல் படுக்க செல்வதற்கு முன், உணவுகள் மற்றும் காப்ஃபைன் போன்றவற்றை உண்ண கொடுக்காதீர்கள்.

படுக்கையறை தூங்குவதற்காக…

அமைதியான, இருட்டான சூழலை படுக்கையறையில் அவர்களுக்கு உருவாக்கி தர வேண்டும். அப்படி செய்வதால் உடல் வெப்பநிலை குறைந்து ஓய்வை ஊக்கப்படுத்தும். படுக்கையறையில் இரைச்சலை தவிர்க்க வேண்டும். இதமான நிறத்தில் சுவர்களில் பெயிண்ட் அடித்திருக்க வேண்டும். வசதியான படுக்கையை அளித்திருக்க வேண்டும். மேலும் கணிப்பொறி போன்ற எலெக்ட்ரானிக் கருவிகளை அங்கே வைக்கவே கூடாது.

அளவான இரவு உணவு

இரவு உணவு அளவாக இருக்க வேண்டும் ஆனால் அதற்காக பசியில் தூங்க செல்லக் கூடாது. படுக்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே உணவருந்த வையுங்கள். ஆனால் படுப்பதற்கு முன்பு வெதுவெதுவென பாலை அருந்தலாம்.

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையை தவிர்க்கவும்

சீரான முறையில் உடற்பயிற்சி செய்தால், உடல் திடமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நமது டென்ஷன் போன்றவற்றையும் நீக்கும். இதனால் நன்றாக தூங்கவும் முடியும். ஆனால் ஒரு நடவடிக்கைக்கும், மற்றொரு நடவடிக்கைக்கும் மத்தியில் சற்று இடைவெளி இருக்க வேண்டும். அதனால் உடற்பயிற்சி செய்ய வேண்டுமானால் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செய்ய வேண்டும்.

தூக்கத்தை பழிக்காதீர்கள்

குட்டி தூக்கம் போடலாம் ஆனால் அது 30 நிமிடங்களுக்கு மேலாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் இரவு நீண்ட நேரம் தூக்கம் வராமல் விழித்திருக்க வேண்டி வரும். அப்படி தூக்கம் வராமல் நேரம் கழித்து தூங்கினால் காலையில் நேரம் கழித்து தான் எழுந்திருக்க வேண்டி வரும். அதே போல் தொலைக்காட்சி பார்ப்பது அல்லது படிப்பது போன்றவற்றை இரவு நேரத்தில் நீண்ட நேரம் ஈடுபடாதீர்கள்.

Related posts

ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுக்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி!!

nathan

பேன் தொல்லையா?

nathan

தெரிஞ்சிக்கங்க… கொரோனா காலத்தில் கர்ப்பவதி.. எப்படி ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தை அதிக எடையுடன் பிறக்க என்ன காரணங்கள்..!

nathan

தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா இஞ்சியை அதிக அளவு எடுத்துகொள்ளக்கூடாது ஏன்…?

nathan

இந்த பொருட்களை வீட்ல வெச்சுருக்காதீங்க… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உஷாரா இருங்க…! இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் தவறான ஒருவரை திருமணம் செய்துள்ளீர்கள் என்று அர்த்தமாம்…

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகள் ஏன் விளையாட வேண்டும்?

nathan