நாம் சாப்பிடும் உணவுகள் சீரான முறையில் செரிமானம் அடைவதற்கு உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதற்கு எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிகூடாது
- இரவில் கீரை சாப்பிடக் கூடாது. அதுவும் மது அருந்தியவர்கள் அகத்திக்கீரை சாப்பிடக் கூடாது. இரவில் பால் குடிக்கும் போது, அதனுடன் சேர்த்து பழங்கள், இறைச்சி, தேங்காய், வால்நட், யோகர்ட், முட்டை, கொள்ளு, பருப்புகள், காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.
- முள்ளங்கி, பூண்டு, கீரைகள், முருங்கைக்காய் இவற்றால் தயாரான உணவுகளைச் சாப்பிட்ட பின் பாலைக் குடிக்கவே கூடாது. இதனால் சரும பிரச்சனைகள் ஏற்படும்.
- பால், தயிர் சாப்பிட்ட பின் அதோடு பழங்களையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது நம் ஜீரண மண்டலத்தை பலவீனமாக்கி, உடலில் கபம், பித்தம் ஆகிய பிரச்சனையை உண்டாக்கும்.
- சம அளவுள்ள தேனும், நெய்யும் சேர்த்து சாப்பிட்டால், அது விஷமாகும். எனவே அதிகமாக தேன், குறைவாக நெய் அல்லது குறைவாக தேன், அதிகமாக நெய் என்று கலந்து சாப்பிடலாம்.
- தேனை சூடுபடுத்தவோ, வேகவைக்கவோ, சமைக்கவோ பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது தன் தன்மையை இழந்து, நச்சுப்பொருளாக மாறிவிடும். அதேபோல காலையில் தேனை வெந்நீரோடு சேர்த்தும் குடிக்கக் கூடாது.
- பால், யோகர்ட், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றோடு எலுமிச்சை பழத்தை சேர்த்துச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது அசிடிட்டி மற்றும் வயிற்றுப் பிரச்னையை உண்டாக்கும்.
- ஒரே நாளில் சிக்கன் மற்றும் பன்றி இறைச்சியை சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதனால் குடலுக்கு அழுத்தம் அதிகமாகி, பல நச்சுக்களை உருவாக்கி, நம் உடலின் வளர்சிதை மாற்றத்தையே பாதிக்கும்.
- இரவில் நம் உடலின் ஜீரண மண்டலம் மிகவும் சோர்வாக இருப்பதால், இரவு நேரத்தில் தயிர், மோரை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது பல்வேறு விதமான ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் உண்டாக்கிவிடும்.
- இறைச்சி சாப்பிடும் போது தேன் மற்றும் வேகவைத்த முள்ளங்கி, கறுப்பு உளுந்து, முளைகட்டிய பயறு வகைகளைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது அஜீரணம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் ஆகியவை உண்டாக்கும்.
- பலாப்பழம், முள்ளங்கி ஆகியவற்றை கறுப்பு உளுந்தில் தயாரான உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.
- வாழைப்பழம்-மோர், தயிர்-பேரீச்சம்பழம், பால்-மதுபானம் இந்த உணவுகளின் சேர்க்கையை சாப்பிடவேக் கூடாது. ஏனெனில் அதனால் மூச்சுத்திணறல் பிரச்சனை உண்டாகும்.
- நெய்யை 10 நாட்களுக்கு மேல் வெண்கலப் பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் வைத்திருந்தால், அது நச்சுப் பொருளாக மாறிவிடும்.
- சமைத்த உணவை சமைக்காத உணவுடன் சேர்த்து சாப்பிடவோ கூடாது. ஏனெனில் அதனால் அஜீரணக் கோளாறு பிரச்சனைகள் உண்டாகும்.