katraazhai
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சோற்றுக் கற்றாழைமருத்துவ குணங்கள்

சோற்றுக் கற்றாழையின் தாவர பெயர் “ஆலோவேரா’. கற்றாழையில் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை, மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சோற்றுக்கற்றாழை மடல்களை பிளந்து, நுங்கு சுளை போல் உள்ள சதைப்பகுதியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, நல்ல தண்ணீரில், ஏழு முறைக்கு மேல் நன்றாக கழுவி எடுத்துக் கொண்டு, மருந்தாக பயன்படுத்தலாம்.
சோற்றுக்கற்றாழை வேர்களை வெட்டி, சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து, இட்லி பானையில் பால் விட்டு, தட்டில் வேர்களை வைத்து, ஆவியில் வேக வைக்க வேண்டும். பின்னர் அதை நன்கு காய வைத்து, பொடி செய்து, தினம் ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டால், தாம்பத்திய உறவு மேம்படும்.
கற்றாழையின் சதைப்பகுதியை பாத்திரத்தில் வைத்து, சிறிது படிகாரத்தூளை தூவினால், சதைப்பகுதியில் உள்ள நீர் பிரிந்து விடும்.
அந்த நீருக்கு சமமாக, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து, நீர் சுண்ட காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் தலைக்கு தடவி வந்தால், கூந்தல் நன்றாக வளரும். இரவில் நல்ல தூக்கம் வரும்.
முகத்தில் கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்பு இருந்தால், சிறிது கற்றாழை சாறை தினமும் முகத்தில் தடவி வந்தால், நல்ல குணம் கிடைக்கும். தீக்காயங்களுக்கும், சவரம் செய்யும் போது ஏற்படும் கீறல்களுக்கும் கற்றாழைச் சாறு நல்ல மருந்து.
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து, காலையில் வெந்நீரால் கழுவினால், முகத்தில் கருமை நீங்கி முகம் பொலிவு பெறும். கண் நோய், கண் எரிச்சலுக்கு, கற்றாழைச் சோற்றை கண்களின் மீது வைக்கலாம்.
விளக்கெண்ணையுடன் கற்றாழை சோறை காய்ச்சி, காலை, மாலை இருவேளைகள் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு நீங்கி, மேனி பளபளப்பாக தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் தீரும்.katraazhai

Related posts

பற்களை பாதுகாகும் மவுத் வாஷ்

nathan

உங்களுக்கு தெரியுமா வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் முக்கியமான நன்மைகள்.

nathan

ஆண்கள் ஏன் குள்ளமான பெண்களை அதிகம் விரும்புகிறார்கள்…

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் 40+ வயசா? எலும்புத் தளர்ச்சி கவனம்!

nathan

கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே…! ((Don’t go for Soft Drinks in Summer..!)…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில யோசனைகள்

nathan

ஹெல்த் அண்ட் பியூட்டி

nathan

முயன்று பாருங்கள் உலர் பழங்களின் உதவியால் எடை குறைப்பதற்கான சில டிப்ஸ்கள்

nathan

எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்!

nathan