26 weight loss b
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை உணவுகள்!!!

உங்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும், ஆனால் அதற்கு எப்படி பிள்ளையார் சுழி போட வேண்டும் என தெரியவில்லையா? கவலை வேண்டாம், உங்களுக்கான டயட் திட்டத்திற்கு நாங்கள் உதவுகிறோம். உங்கள் உடல் எடையை சில கிலோக்கள் குறைக்க நீங்கள் கவனம் செலுத்த வேண்டியதெல்லாம் உங்களின் டயட் திட்டத்தில் மட்டுமே. இந்த திட்டத்தின் செயல்பாட்டில், சத்தான காலை உணவுகளை உண்ண வேண்டும்; மதியம் அளவாக சாப்பிட வேண்டும்; இரவிற்கு சிறிது உணவை மட்டும் உண்ண வேண்டும்.

உங்கள் எடை குறைப்பின் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளீர்கள் என்றால் உங்கள் காலை உணவின் மீதும் கண்டிப்பாக கவனம் செலுத்த தொடங்க வேண்டும். உங்கள் காலை உணவில் தேவையான அனைத்து வைட்டமின்கள், கனிமங்கள், நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களும் இருக்க வேண்டும். அதே நேரம் உங்கள் உடல் எடை கூடி விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க நம் இந்திய உணவுகளில் எதை தேர்ந்தெடுப்பது என தெரியவில்லை என்றால், இதோ உங்களுக்காக ஒரு நல்ல செய்தி.

சுவைமிக்க உணவுகளை உட்கொள்ளும் அதே நேரத்தில் உங்கள் உடல் எடையையும் குறைக்க முடியும். உங்கள் உடல் எடையை குறைக்க போதுமான இந்திய காலை உணவுகள் இருக்கத் தான் செய்கிறது. இவ்வகை உணவுகள் சுவைமிக்க இருப்பதோடு ஊட்டச்சத்துகளுடனும் விளங்குகிறது.

சரி, உடல் எடையை குறைக்க உதவும் இந்திய காலை உணவுகளைப் பற்றி இப்போது கொஞ்சம் பார்க்கலாம்.

கிச்சடி

ஆரோக்கியமான கிச்சடியுடன் உங்கள் நாளை தொடங்குவது ஒரு மிகச்சிறந்த தேர்வாகும். குறைந்த மசாலாவுடன் பருப்பு கிச்சடி, ராகி கிச்சடி அல்லது பார்லி கிச்சடியை செய்யலாம். அதற்கு சுவையூட்ட முடிந்த வரையிலான காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கிச்சடி என்பது உங்கள் வயிற்றை நிரப்பும் காலை உணவாக விளங்கும். மேலும் இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கவும் செய்யாது.

அவல்

காலை உணவிற்கு அவல் சிறந்த உணவாக விளங்குகிறது. உங்கள் வயிற்றுக்கு லேசான உணவாக விளங்கும் இது கண் பார்வைக்கு மிகவும் நல்லது. குறைந்த கலோரிகளையும் கொண்டுள்ளதாகும். எனவே காலையில் அவல் உப்புமா செய்து சாப்பிடுங்கள்.

கோதுமை ரவை

கோதுமை ரவை என்பது உடல் எடை குறைப்பிற்கு மிகவும் சிறந்த தேர்வாகும். இதில் நார்ச்சத்துக்களும், கார்போஹைட்ரேட்டுகளும் அதிக அளவில் நிறைந்துள்ளது. நிமிடத்தில் தயாராகும் இந்த உணவில் கலோரிகள் குறைவாக உள்ளது. அதிலும் கோதுமை ரவை உப்புமா செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

தோசை

உடல் எடையை குறைக்க வேண்டுமானால், பலதர தானியங்களை கொண்ட தோசையை உண்ணலாம். இதனை அடை தோசை என கூறுவார்கள். இதனை குறைந்த எண்ணெய் ஊற்றி நான்-ஸ்டிக் தவாவில் செய்து, வயிறு நிறைந்த காலை உணவை உண்ணுங்கள்.

இட்லி

உடல் எடையை குறைக்க அவித்த எந்த உணவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆரோக்கியமான தேர்வுகளுக்கு ரவை அல்லது ராகியில் செய்த இட்லியை உண்ணுங்கள்.

ஓட்ஸ்

அளவுக்கு அதிகமான பழங்கள் மற்றும் பாலை ஓட்ஸில் கலந்து, வயிறு நிறைந்த காலை உணவை உட்கொள்ளுங்கள். இப்படி உண்ண பிடிக்கவில்லை என்றால், ஓட்ஸை கொண்டு உப்புமா அல்லது தோசை செய்யலாம். அதிலும் ஓட்ஸ் ஊத்தாப்பம் மிகவும் சூப்பராக இருக்கும்.

முட்டை சாண்ட்விச்

கோதுமை பிரட் மற்றும் அவித்த முட்டையுடன் கொஞ்சம் உப்பும், மிளகும் சேர்த்து தயாரிக்கப்படும் சாண்ட்விச்சை கூட பயன்படுத்தலாம். முட்டை என்பது ஊட்டச்சத்துக்களின் கிடங்காகும். உடல் எடையை குறைக்க இந்த முட்டை சாண்ட்விச் சிறந்த உணவாகும்.

Related posts

பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்?

nathan

சுவையான… ரவா ரொட்டி

nathan

தெரிஞ்சிக்கங்க…அல்சரைப் போக்கும் சிவப்பு முட்டைக்கோஸ் பொரியல்

nathan

உங்களுக்கு உடலில் உள்ள கொழுப்பு, குறைய வேண்டுமா..?

nathan

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் சாப்பிடுவது நல்லதா?

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பேரீச்சம்பழ கீர்

nathan

உங்களுக்கு தெரியுமா தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை…. இதை சாப்பிட்டாலே போதும்!!

nathan

தெரிஞ்சிக்கங்க…பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை உள்ளதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan