625.500.560.350.160.300.0 3
ஆரோக்கியம் குறிப்புகள்

வீடு முழுவதும் நறுமணமாக வாசமாக இருக்க வேண்டுமா? இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

வீட்டில் எப்போதும் ஒரு நறுமணம் வீசிக்கொண்டே இருப்பது போல் உணர்ந்தால் இந்த டிப்ஸை ஒரு முறை செய்து பாருங்கள். உங்களுக்கு உதவலாம்.

இதைப் பயன்படுத்தினால் உங்களுக்கு துர்நாற்றம் போக்க பயன்படுத்தப்படும் ரூம் ஃபிரெஷ்னர்களே தேவைப்படாது.

தேவையான பொருட்கள்

 

  • துணி கண்டிஷ்ணர் – 2 மூடி
  • தண்ணீர் – 2 டம்ளர்
  • ஸ்பிரே பாட்டில்

 

முதலில் ஸ்பிரே பாட்டிலை தயார் செய்துகொள்ளுங்கள். இதற்கு தூக்கி எறியும் தண்ணீர் பாட்டில் இருந்தாலே போதும். ஸ்பிரே அடிக்கும் கருவி மட்டும் கடையில் வாங்கிக்கொள்ளலாம்.

துணி துவைத்ததும் இறுதியாக வாசனைக்காக பயன்படுத்தப்படும் துணி கண்டிஷ்ணரை இரண்டு மூடி அளவிற்கு எடுத்துக்கொண்டு அதை பாட்டிலில் ஊற்றுங்கள்.

தண்ணீரை சூடாக்கிக்கொள்ளுங்கள். சூடு நாம் விரல் தாங்கக் கூடிய சூட்டில் இருக்க வேண்டும். தண்ணீரையும் பாட்டிலில் ஊற்றுங்கள்.

தற்போது மூடி போட்டு மூடிக்கொள்ளுங்கள். நன்கு குலுக்கினால், வாசனை ஸ்பிரே தயார்.

இதை வீட்டில் அப்படியே தெளிக்காமல் வீட்டில் ஜன்னல் திரை, வாசல் கதவில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரைகளில் ஸ்பிரே செய்யுங்கள்.

சோஃபா, கட்டில் துணிகள் மீதும் தெளித்துவிடுங்கள். இவை அப்படியே ஊறி காற்றடிக்கும் போதெல்லாம் வாசனை வீடு முழுவதும் கமழும். எப்போதும் வாசனை இருந்து கொண்டே இருக்கும்.

Related posts

பெண்களுக்கு வயது அதிகமாகும்போது 5 முக்கியஊட்டச்சத்துக்கள் ..

nathan

ஆ… அலுமினியம்…அபாயம்!01 Sep 2015

nathan

பெண்களின் ஆசைகளில் ஒரு அதிசய மாற்றம்

nathan

பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால்

nathan

திபெத்திய மக்களின் வெள்ளையான மற்றும் வலிமையான பற்களின் ரகசியம் என்ன தெரியுமா?

nathan

வேர்குருவை தடுக்க கூடிய வீட்டு மருத்துவம்

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! இளம் பெண்கள் கவனத்திற்கு,. இரவில் உறங்கும் போது இதை மறவாதீர்…

nathan

காதல்னு சொன்னாலே தலைதெறிக்க ஓடும் ராசிகள் என்னென்ன தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

உடற்பயிற்சிக்கு முன் உப்பு உட்கொள்வதால் ஏதேனும் நன்மை உண்டா?

nathan