28.9 C
Chennai
Tuesday, Jul 22, 2025
24 140360
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இரவில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை தூங்க வைக்க சில டிப்ஸ்…

குழந்தைகள் சில சமயங்களில் காலை முதல் மாலை வரை நன்கு தூங்கி எழுந்து, மாலை வேளையில் இருந்து குஷியாக சுறுசுறுப்புடன் இருப்பார்கள். அப்படி குழந்தைகள் மாலையில் சுறுசுறுப்பாக விளையாட ஆரம்பித்தால், பின் இரவில் அவர்கள் தூங்கவேமாட்டார்கள். ஆனால் பெரும்பாலானோர் குழந்தைகள் மாலையில் நன்கு விளையாட ஆரம்பித்தால், அவர்களுடன் சேர்ந்து நன்கு விளையாடிவிட்டு, பின் இரவில் குழந்தைகள் தூங்காமல் இருக்கும் போது பெரும் அவஸ்தைக்குள்ளாவார்கள்.

ஆகவே எப்போதுமே குழந்தைகளை பகல் வேளையில் விளையாட வைத்துவிட்டு, மாலையில் அவர்களை தூங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், இரவில் தூங்காமல் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்களின் உடலில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் பெற்றோராகிய உங்களுக்குத் தான் பெரும் பிரச்சனை.

எனவே குழந்தைகள் இரவில் சுறுசுறுப்புடன் விளையாடாமல் தூங்க வைக்க சில எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செய்து வந்தால், குழந்தைகளை இரவில் தூங்க வைக்கலாம்.

மாலையில் சுறுசுறுப்புடன் இருக்க அனுமதிக்காதீர்கள்

நிறைய பெற்றோர்கள் குழந்தைகள் மாலையில் சுறுசுறுப்புடன் இருந்தால், சந்தோஷமாக அவர்களுடன் சேர்ந்து விளையாடினால், அவர்கள் இரவில் சோர்வடைந்து தூங்கிவிடுவார்கள் என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் மாலையில் சுறுசுறுப்பாக விளையாட ஆரம்பித்தால், இரவில் அவர்களை தூங்க வைப்பது என்பது மிகவும் கடினம். எனவே மாலையில் இருந்தே அவர்களை தூங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

ஒரே நேரத்தை பின்பற்றுங்கள்

தினமும் ஒரே மாதிரியான நடவடிக்கையை பின்பற்றினால், குழந்தைகள் அதற்கேற்றாற் போல் விரைவில் மாறிக் கொள்வார்கள். எனவே அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுத்து, தூங்க வைக்க வேண்டிய நேரத்தில் தூங்க வைத்து வர வேண்டும்.

வெதுவெதுப்பான குளியல்

இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டி விட்டால், அவர்களுக்கு தானாக தூக்கமானது வந்துவிடும்.

தாயின் அரவணைப்புடன் தூக்கம்

இரவு நேரம் தான் குழந்தையும் தாயும் ஒன்றாக நிம்மதியாக தூங்கும் நேரம். எனவே இரவில் குழந்தை எவ்வளவு தான் சுறுசுறுப்பாக இருந்தாலும், தாயுடன் தனிமையாக தாயின் அரவணைப்பில் இருந்தால், எப்பேற்பட்ட குழந்தையும் விரைவில் தூங்கிவிடும்.

இருட்டான அறை

குழந்தையை இரவில் இருட்டான அறையிலோ அல்லது மங்கலான நிறம் கொண்ட பல்ப் உள்ள அறையிலோ படுக்க வைத்தால், அவர்களுக்கு தூக்கமானது தானாக வந்துவிடும்.

தாலாட்டு பாடவும்

குழந்தைகள் கருவறையில் இருக்கும் போது தாயின் சப்தத்தைக் கேட்டுக் கொண்டே இருந்ததால், அவர்களை அரவணைத்துக் கொண்டு, மென்மையான தாலாட்டுப் பாடினால், அவர்கள் அதைக் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவார்கள்.

அமைதியாக இருங்கள்

மேலே சொன்ன அனைத்து வழிகளும் தோல்வியைத் தழுவினால், அவர்களை போதிய பாதுகாப்பில் அமர வைத்து விட்டு, தனியாக வந்துவிடுங்கள். அப்படி அவர்கள் தனிமையில் இருந்தால், அவர்கள் விரைவில் சோர்வடைந்து தூங்கிவிடுவார்கள்.

Related posts

வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால் இத்தனை நன்மைகளாம்!…

sangika

புரட்டாசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் என்ன?

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்க தொப்பையை எளிதில் குறைக்க இந்த 5 உடற்பயிற்சிகள் மட்டும் போதும்!

nathan

முதுமையும் மன ஆரோக்கியமும்

nathan

காலை உணவு அவசியம்

nathan

காயம் ஏற்பட்டால் நாம் முதலில் தடவுவது தேங்காய் எண்ணெய்யை தான். தேங்காய் எண்ணெய் காயங்களை ஆற்றுவதோடு மட்டுமல்லாமல், அந்த காயங்களில் நீர் புகாமல் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது.

nathan

கோடை காலங்களில் நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்க கூடிய பானங்கள்!….

nathan

குழந்தைகளுக்கு இந்த பொம்மைகளை வாங்கி கொடுக்காதீங்க..!தெரிந்துகொள்வோமா?

nathan

Health tips.. வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்யும் அன்னாசிப்பழம்!

nathan