28.7 C
Chennai
Saturday, Jul 26, 2025
625.500.560.350.160.300.053.800.9 16
ஆரோக்கியம் குறிப்புகள்

அலட்சியம் வேண்டாம்?இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் பேராபத்து! படுக்கையறையில் இருந்து தூக்கி வீசுங்கள்….

இந்த உலகத்தில் நல்ல சக்திகள் இருப்பது போலவே, சில தீய சக்திகளும் இருக்கிறது என்பதை பலர் நம்ப மாட்டார்கள்.

நமது வீட்டில் ஒரு சில பொருட்களை வைப்பதன் மூலமாக, அதிஷ்டம், அன்பு, சொத்துக்கள், உறவுகள், பலதரப்பட்ட நன்மைகள் போன்றவை கிடைக்கும்.

அதே சமயத்தில் உங்களது வீட்டில் ஒரு சில பொருட்களை வைத்துக் கொள்வதன் மூலமாக உங்களது வீட்டில் எதிர்மறை சக்திகள் சூழ்ந்து காணப்படும்.

இந்த பகுதியில் உங்களது வீட்டில் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் பொருட்கள் என்னென்ன என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

அயர்ன் பாக்ஸ்
உங்களது படுக்கை அறையில் எப்பொழுதும் அயர்ன் பாக்ஸை வைக்க கூடாது இது தம்பதிகளுக்குள் உள்ள நெறுக்கத்தை குறைப்பதோடு, சண்டை சச்சரவுகள் வருவதற்கு வழிவகுக்கும். எனவே இந்த அயர்ன் பாக்ஸை மட்டும் படுக்கை அறையில் வைக்க கூடாது.

கத்திரிக்கோல்
நாம் அதிகமாக செய்யும் தவறு என்னவென்றால், கத்திரிக்கோலை திறந்த நிலையிலேயே வைப்பது ஆகும். வாய் திறந்த நிலையில் இருக்கும் கத்திரிக்கோலானது உங்களது வீட்டில் எதிர்மறை சக்திகளை அதிகரிக்கச் செய்யும். எனவே எப்பொழுதும் உங்களது வேலை முடிந்ததும் கத்திரிக்கோலை மூடிய நிலையில் வைக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

போட்டோ பிரேம்கள்
நீங்கள் உங்களது புகைப்படங்களை வைத்திருக்கும் போட்டோ பிரேம்கள் நல்ல நிலையில் தான் உள்ளதா என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அதில் ஏதேனும் உடைசல்கள், வெடிப்புகள் இருந்தால் அதனை மாற்றிவிட்டு புதிய போட்டோ பிரேம்களை வைக்க வேண்டியது அவசியமாகும். இந்த டேமெஜ் ஆன பிரேம்கள் கூட எதிர்மறை சக்திகளை உண்டாக்கும்.

இறந்த மிருகங்கள்
நீங்கள் புலியின் தோல், மானின் கொம்புகள் போன்றவை உங்களது ஹாலின் அழகை மேம்படுத்துவதாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அவ்வாறு கிடையாது, இறந்த எந்த ஒரு மிருகத்தின் உடலின் பகுதிகளையும் உங்களது வீட்டில் வைத்திருந்தால் உங்களது வீட்டை எதிர்மறை சக்திகள் சூழ்ந்து கொள்ளும். எனவே இவற்றை வீட்டில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

காய்ந்த பூக்கள்
உங்களது வீட்டில் காய்ந்த பூக்களை வைத்திருக்க கூடாது. நீங்கள் பிளவர்வாஷில் வைத்திருக்கும் பூக்களை தினசரி மறக்காமல் மாற்ற வேண்டியது அவசியமாகும். வீட்டில் செயற்கையான பூக்களையும் வைத்திருக்க கூடாது. இதுவே நீங்கள் பிரஷ் ஆன பூக்களை உங்களது வீட்டில் வைத்திருந்தால் அது நேர்மறையான ஆற்றலை வெளிப்படுத்தும்.

கண்ணாடிகள்
உங்களது வீட்டில் இருக்கும் கண்ணாடிகளை எப்பொழுதும் துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அதே சமயத்தில் வீட்டில் உடைந்த கண்ணாடிகள், மிகவும் பழைய நிலையில் உள்ள கண்ணாடிகள் ஏதேனும் இருந்தால் அவற்றை உடனடியாக வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஏன்னெனில் இந்த உடைந்த மற்றும் அழுக்கான கண்ணாடிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும். கண்ணாடிகளை துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.

முக்கிய குறிப்பு
வாஸ்து முறைப்படி சமையலறை வடமேற்கு திசையில் இருந்தால் அது குடும்பத்தில் ஒரு பெரிய பிரச்னை ஏற்படுதக்கூடியது.
குளியல் அறை வட மேற்கு திசையில் இருப்பது நல்லது.
அதே போல தென் கிழக்கு பகுதியில் சமையலறை இருப்பது சிறப்பான அமைப்பு.
வடமேற்கு பகுதியில் இருந்தால், அது குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற கடுமையான வேறுபாடுகளையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன.

Related posts

இடுப்பு கொழுப்பை மட்டும் மின்னல் வேகத்தில் கரைக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

மன அழுத்தத்தை போக்கும் பூக்கள்..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா செல்போனுக்கு அடிமையாக இருப்பதை விட்டொழிப்பது எப்படி?

nathan

உங்க காலில் மச்சம் இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

நாம் வலுக்கட்டாயமாக வாக்கர் மூலம் நடக்கப் பழக்கப்படுத்துவது இயற்கைக்கு முரணானது.

nathan

பற்களைத் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்!

nathan

உங்கள் இளமையைப் பாதுகாக்க

nathan

உங்களுக்கு தெரியுமா பிரியாணி இலைல டீ போட்டு குடிச்சா கடகடன்னு வெயிட் குறையுதாம்..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீங்கள் எப்போதும் சோர்வடைவதற்கான காரணங்கள்!!!

nathan