25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
625.500.560.350.160.300.053.800 10
ஆரோக்கியம் குறிப்புகள்

மருத்துவர் கூறும் தகவல்கள்! சர்க்கரை நோயை விரட்டியடிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

உடல் நலப்பிரச்சினைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான்.

ஏனென்றால் நாம் அதனை கவனிக்க வில்லை என்றால் உயிர் போக்கூடிய அளவுக்கும் உடலை உருக்குலைத்திடும் குணம் அதற்கு நிறைய இருக்கிறது.

மிக முக்கியமாக அதன் அறிகுறிகள் அவ்வளவாக பெரிதாக தெரியாது. ரத்தப்பரிசோதனை மூலமாகத்தான் நமக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதையே கண்டறிய முடிகின்றது.

அறிகுறிகளை வைத்து நாம் கண்டு கொள்ள முடியும் என்றாலும் பலரும் அதனை பெரிதாக அலட்டிக் கொள்வதே கிடையாது.

அப்படியே சர்க்கரை நோய் வந்திருந்தாலும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்போது இந்த முறையை கடைப்பிடியுங்கள்.

  • டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாகத்தான் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரவே முடியும்.

தவிர்க்க

  • பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட உணவுகள் ரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரித்து விடும். அதனால் அவ்வகை உணவுகளை நீங்கள் ஆரம்பத்திலிருந்தே தவிர்த்து விட வேண்டும்.
  • உணவுக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன் என்று பட்டினியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ரத்தச்சர்க்கரையை குறைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயை அளவாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • கேரட் தவிர மற்ற கிழங்கு வகை உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து விட வேண்டும்.

பாகற்காய்

  • பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டா கரோட்டினும் இருக்கிறது.
  • பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
  • தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுக்குள் வந்து விடும்.

மஞ்சள்

  • கணையத்தில் உள்ள திசுவினுள் ‘மேக்ரோபேஜ்’ (Macrophage) எனும் தற்காப்பு செல்கள் நுழைந்து, ‘சைட்டோகைன்ஸ்’ என்ற அழற்சியை உருவாக்கும் புரதத்தைச் சுரப்பதால் இன்சுலினை உற்பத்திசெய்யும் செல்கள் சேதமடைந்து விடுகின்றன.
  • இதனை சீராக்க குர்குமின் என்ற வேதிப்பொருள் தேவை அவை இன்சுலின் சுரப்பை மேம்படுத்த உதவி செய்யும்.
  • இதனால் சர்க்கரை நோய் குறித்த பயம் வேண்டவே வேண்டாம்.
  • இந்த குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் மஞ்சளில் அதிகமாக இருக்கின்றது.

நட்ஸ்

  • நட்ஸில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகின்றன.
  • இதில் உள்ள நல்ல கொழுப்பு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றிவிடுவதால், உடலில் நல்ல கொழுப்பு நிறைந்து, இதயத்தின் ஆரோக்கியம் மேம்பட உதவி செய்யும்.
  • இன்சுலின் சுரப்பும் சீராகும்.
  • சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

நாவல் பழம்

  • நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன. நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
  • நாவல் பழக் கொட்டைகளை பொடியாக்கி தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகளை குறைத்து விடலாம்.

Related posts

இதயநோய்கள் TOP 10 தவறுகள்!

nathan

ஏசி’யிலேயே இருப்பவரா?

nathan

அப்ப தினமும் செய்யுங்க… தளர்ந்து தொங்கும் சருமத்தை இறுக்கணுமா?

nathan

இதோ எளிய நிவாரணம்! ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்ப நித்திரை யோகா செய்யுங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆவி பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

nathan

இந்த 5 ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள்…

nathan

இதோ எளிய நிவாரணம்! குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட சில வீட்டுமுறை வைத்தியம்…

nathan

இந்த நேரத்தில் கனவு கண்டால் மிகவும் ஜாக்கிரதை….தெரிஞ்சிக்கங்க…

nathan

சந்தன மரங்கள் அதிகம் பயன் தருபவை……

sangika