35 C
Chennai
Wednesday, Jun 24, 2026
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா 2 வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாத எலுமிச்சை ஊறுகாய்!.. செய்வது எப்படி?

லுமிச்சை பழத்தை சமையலில் பல விதமாக பயன்படுத்துவோம்.

ஆனால் அதை ஊறுகாய் செய்து தினமும் ஒரு துளி சாப்பாட்டுடன் சாப்பிட்டாலே ஜீரண சக்தி அதிகரித்து, பசியை தூண்டும்.

2 வருடம் ஆனாலும் கெடாமல் இருக்கும் எலுமிச்சை ஊறுகாய் எப்படி செய்வது என பாப்போம்.

தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழம் – 1 கிலோ
உப்பு – 1 கப்
நல்லெண்ணெய் – 200 கிராம்
கடுகு – 3 தேக்கரண்டி
வெந்தயம் – 1 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 100 கிராம்
பெருங்காயம் – 1 தேக்கரண்டி

செய்முறை

எலுமிச்சை பழத்தை நன்றாக கழுவி கொஞ்சமும் ஈரம் இல்லாமல் துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

1 எலுமிச்சை பழத்தை 8 துண்டுகளாக அனைத்தையும் வெட்டிக்கொள்ளவும்.

வெட்டும் பொழுதே விதைகளை நீக்கி விடவும். ஊறுகாய் போட பீங்கான் அல்லது கண்ணாடி ஜாடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஜாடியில் வெட்டிய எலுமிச்சை பழம் மற்றும் 1 கப் உப்பை சேர்த்து நன்றாக குலுக்கி விடவும். இதை வெயில் காலமாக இருந்தால் 5 நாட்களும் , குளிர்காலமாக இருந்தால் 7 நாட்களும் ஊற வைக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஜாடியை குலுக்கி மூடி போட்டு வைக்க வேண்டும்.

5 அல்லது 7 நாட்கள் ஊறிய எலுமிச்சை பழத்தை 1 நாள் வெயில் காய வைக்கவேண்டும்.

எலுமிச்சை பழத்தை சாறு இல்லாமல் எடுத்தும்,சாறை தனியாகவும் காய வைக்க வேண்டும், ஒருநாள் வெயிலில் காய்ந்ததும் ஊறுகாயை தாளிக்கலாம்.

தாளிப்பதற்கு
கடுகு மற்றும் வெந்தயத்தை எண்ணெய் ஊற்றாமல் வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும்.
பின் இவ்விரண்டையும் தனித்தனியாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
100 கிராம் காய்ந்த மிளகாயை வெயிலில் காய வைத்து அதையும் மிக்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் 1 தேக்கரண்டி கடுகு சேர்த்து கடுகு பொரிந்ததும் அடுப்பை அணைத்திடுங்கள்.
பின் எண்ணெய்யில் 1 தேக்கரண்டி பெருங்காயம் சேர்த்து எண்ணெயை ஆற விடுங்கள்.
எண்ணெய் ஆறியதும் காய வைத்த எலுமிச்சை பழம், அதன் சாறு ,அரைத்த கடுகு ,வெந்தயம் ,காய்ந்த மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி கண்ணாடி ஜாடியில் சேர்த்தால் சுவையான எலுமிச்சை ஊறுகாய் தயார்.

Related posts

கார உணவுகள் உடலுக்கு நல்லதா?

nathan

உங்களுக்கு தெரியுமா இளம் பெண்களுக்கு ஊட்டம் அளிக்க கூடிய உணவுகள் இவைதானாம்

nathan

உங்களுக்கு தெரியுமா சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

அன்றாடம் இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலில் அற்புதமான மாற்றம் நிகழும்..!!

nathan

மூளை வளர்ச்சியை அதிகரிக்க மீன் சாப்பிடுவது சரியான வழி

nathan

உடல் சோர்வை நீக்ககி நரம்புகளின் வலிமையை உறுதியாக்க தினமும் இத சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்…

nathan

குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பவரா நீங்கள்? அதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?

nathan

வெறும் வயிற்றில் காலையில் என்ன சாப்பிடலாம்?

nathan

லிச்சி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!

nathan