625.500.560.350.160.300.053
ஆரோக்கியம் குறிப்புகள்

இதோ எளிய நிவாரணம்! உடலில் கொழுப்புகளை கரைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

நமது உடலில் உள்ள லிப்டின் எனும் ஹார்மோன், உடல் பருமனில் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

லிப்டின் என்பது கொழுப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனாகும். இது உடலில் கொழுப்பு செல்கள் அதிகமாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா என்பதை மூளைக்கு தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து, உடலில் சரியான அளவில் கொழுப்புக்கள் இருந்தால், லிப்டின் ரத்தத்தில் நுழைந்து, உடலில் போதுமான அளவு கொழுப்பு இருப்பதை உணர்த்தும்.

உடலுக்கு தேவையில்லாமல் சேர்ந்திருக்கும் கொழுப்புகளை கரைப்பது குறித்து இப்போது பார்ப்போம் :

  • Grape Fruit கொழுப்புச் செல்களை கரைக்க உதவும் உணவாகும். இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், செரிமானத்தை துரிதப்படுத்தும். எனவே, உணவு உட்கொள்ளும் முன்பு இதனை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ குடித்து வந்தால், அதிகப்படியான கலோரிகளை எடுப்பது குறைவதோடு, உடல் எடையும் குறையும்.
  • முழு தானியங்கள் கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன்களை, நமது உடலில் அதிகரிக்க உதவும். இவற்றில் இன்சுலின் அளவை நிலையாக பராமரிக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுக்கள் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். பார்லி, திணை, பக்வீட் போன்ற தனிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்புகளை குறைக்கலாம்.
  • ப்ராக்கோலிகொழுப்பு செல்களைக் கரைக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கும். இதில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் அத்தியாவசிய கனிம சத்துக்கள் நிறைந்துள்ளன. எடை குறைப்பு டயட்டில் சேர்ப்பதற்கு ஏற்ற சிறப்பான உணவாக இது உள்ளன.
  • சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் உடலில் அளவுக்கு அதிகமாக லிப்டின் இருந்தால் அதனை குறைக்கும். மேலும், உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகின்றன.
  • ஜிங்க் சத்து நிறைந்த உணவுகளான மாட்டிறைச்சி, கடல் சிப்பி, நட்ஸ், கொக்கோ, கடல் உணவுகள் மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் லிப்டின் அளவு அதிகரிக்கும்.
  • பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, லெட்யூஸ், கேல், ப்ராக்கோலி ஆகியவற்றில் அத்தியாவசிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இந்த உணவுகள் உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகரிக்காமல் செய்து விடும். அத்துடன் இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைக்கின்றது.
  • புரோட்டீன் உணவுகளான மீன், முட்டை, தயிர், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் போன்றவை தசைகளின் அடர்த்தியை தக்க வைக்கும். மேலும், பசியைக் கட்டுப்படுத்தும்.
  • கொழுப்பு நிறைந்த உணவுகளான ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், அவகேடோ, நட்ஸ், விதைகள், முட்டை, பால் பொருட்கள் போன்றவை கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும்.
  • கேரட்டில் பீட்டா-கரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. கேரட்டில் தயமின், நியாமின், வைட்டமின் பி6, ஃபோலேட், மாங்கனீசு, டயட்டரி நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் அதிக அளவில் உள்ளன. எனவே, கேரட்டை தினமும் சாப்பிட்டால் கொழுப்பின் அளவை குறைக்கலாம்.

Related posts

யோகாவில் அசத்தி வரும் ஷில்பா ஷெட்டி இவருக்கு வயது 44 ஆகும்

nathan

தூக்கம் என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படும் ஒன்று

nathan

கட்டாயம் இதை படியுங்கள் ஆண்கள் மடிக்கணினிகளை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்!!

nathan

உடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றும் எலுமிச்சை பழம்

nathan

தங்கம், வெள்ளி, நவரத்தின நகைகள் அணிவதன் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா கையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா…?

nathan

துரோகத்தை தாங்கும் மனவலிமை எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இருக்கும் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உடல் எடையை மிக வேகமாக குறைக்க வெல்லம்!….

sangika

வாழ்நாள் முழுக்க சந்தோசமாக இருக்க வேண்டுமா? உறவில் அன்யோன்யம் அதிகரிக்க…

nathan