வில்வ பழம் அல்லது மர ஆப்பிள் என்று அழைக்கப்படும் இது உலகம் முழுவதும் அதன் மருத்துவ பலன்களுக்காக உபயோகப்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய பழமாகும்.
இதில் இயற்கையாகவே இருக்கும் மருத்துவ குணங்கள் பல நோய்க்ளைல் இருந்து உடனடி நிவாரணம் அளிக்க பயன்படுகிறது.
- மலச்சிக்கல், குடல்புண், வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பல நோய்களை குணப்படுத்த இந்த பழம் பயன்படுத்தப்படுகிறது.
- வில்வ பழத்தின் சாறை குடிப்பது உங்களின் செரிமானத்தை உடனடியாக ஊக்குவிக்கும்.
- வில்வ மரத்தின் இலைகள் மற்றும் பழங்களில் இருக்கும் ஃபெரோனியா கம் இரத்தத்தில் இருக்கும் குளூகோஸின் அளவை கட்டுப்படுத்துகிறது.
- பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் சர்க்கரை நோயை குறைப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது சர்க்கரை நோயின் தீவிரத்தையும் குறைக்கும்.
- இதில் மற்ற அனைத்து பழங்களை காட்டிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆன இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் சளி, தலைவலி, கண் மற்றும் காது வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
- மேலும் நாள்பட்ட நோய்களை குணப்படுத்துவதிலும், உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் இது முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் இதன் மருத்துவ குணங்கள் இதயத்தை பாதுகாக்கிறது.
- வில்வ பழம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், சிறப்பாக்கவும் பயன்படுகிறது. அதிகளவு புரோட்டின் இருக்கும் இது சேதமடைந்த திசு மற்றும் தசைகளை சரிசெய்ய உதவுகிறது.
- உடனடி ஆற்றல் வழங்கக்கூடிய இது உங்கள் உடலில் இருக்கும் நீரின் அளவை தக்கவைத்து கொள்ள உதவும்.
- இது இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
- இயற்கை கிருமிநாசினியான இது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போவதை தடுக்கிறது. மேலும் இது மழைக்காலத்தில் பொதுவாக ஏற்படும் சரும நோய்களை குணப்படுத்த உதவுகிறது.