அழுகிப்போன முட்டையை எப்படி கண்டுபிடிப்பது என சில இல்லத்தரசிகளை கேட்ட போது, அவர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றை எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
அவர்கள் கூறிவற்றை எல்லாம் முயற்சி செய்து பார்த்த பின்னர், பலனளிக்க கூடிய செய்முறையை கண்டு பிடித்துவிட்டோம். உங்க வீட்டில் முட்டை இருப்பின் உடனே முயற்சி செய்து பாருங்கள், கண்டிப்பாக பலனளிக்கும்.
முதலில் கண்ணாடி பாத்திரம் நிறைய தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்க சந்தேகிக்கும் முட்டையை அந்த பாத்திரத்திற்குள் போடவும். முட்டை கிடைமட்டமாக இருந்தால், அதுவே நல்ல முட்டை.
அடுத்து, முட்டையை பாத்திரத்தில் போட்டதும் செங்குத்தாக நின்றால் முட்டையின் வயது ஒரு வாரம். இது போன்ற முட்டைகளை பச்சையாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால், அதிக சூட்டில் வறுத்து கொடுக்கலாம்.
ஒருவேளை முட்டை பாத்திரத்தில் மிதிக்கிறது என்றால், அதனது வயது இரண்டு அல்லது மூன்று வாரம். இதனை உண்ணவே கூடாது. சரி இந்த மிதவை கான்செப்ட்டை வைத்து முட்டை அழுகிவிட்டது அல்லது ஃப்ரஷ்ஷாக உள்ளதை எப்படி கண்டுபிடிப்பீர்கள் என நீங்க கேட்க வருவது புரிகிறது. அதாவது முட்டையின் ஓட்டிற்குள் சின்ன சின்ன நுண் துளைகள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும். நாளுக்கு நாள் அந்த ஓட்டை வழியே காற்று உள்ளே போகும். பலவாரங்கள் முட்டையினுள் காற்று சென்ற பின்னரே முட்டை மிதக்கிறது. இந்த அறிவியலை வைத்து கெட்டுப்போன முட்டையை எளிதில் தவிர்த்து விடலாம்.