ஆரோக்கியம்எடை குறைய

இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவும் பயிற்சி

6fcb8475-eb62-4d0d-97a6-9a5320ce96f9_S_secvpfஉடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன. ஆனால் இந்த உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்தது அல்ல. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை.

எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின் பேரில், சரியான முறையில் சரியான அளவில் செய்வது நல்லது. இடுப்பு பகுதியில் சேர்ந்திருக்கும் சற்று அதிகப்படியான சதையைக் குறைப்பதற்கான சில உடற்பயிற்சி முறைகள் உள்ளன.  

 
இந்த பயிற்சிகள் அனைத்தும் அதிகப்படியான தொடை சதையைக் குறைப்பதற்கே, பொதுவாகவே சற்று பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு இந்த பயிற்சிகள் பயன் தராது. முதலில் விரிப்பில் நேராக நின்று கொண்டு பாதங்கள் இரண்டிற்கும் 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும்.

கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். கட்டை விரல் இரண்டும் முன்னோக்கி இருக்கட்டும். அதாவது, கட்டைவிரல் முதுகைப் பார்த்தவண்ணம் இல்லாமல், வயிற்றின் மீது இருக்கட்டும். இப்பொழுது இடுப்பை இடமிருந்து வலமாக சுற்றவும். சுமார் 30 வினாடிகள் இதுபோல் இடுப்பை சுற்றவும்.

பின்னர் அடுத்த 60 வினாடிகள் அதே போல் எதிர் திசையில், அதாவது வலமிருந்து இடமாக சுற்றவும். இதுபோல் மாறி மாறி 20 முறை செய்யவும். இந்தப் பயிற்சி செய்யும்போது பாதம் முழுவதும் தரையில் அழுத்தமாக ஊன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 20 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியான எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30  முறை செய்யலாம்.

Related posts

தாய்ப்பாலில் என்னவெல்லாம் இருக்கின்றன

nathan

பெண்களுக்கு வயது அதிகரிக்கும்போது அதற்கேற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்

nathan

உங்களுக்கு தெரியுமா 10 நாட்களில் உடல் எடையை குறைக்க உதவும் வாட்டர் டயட் முறை

nathan

தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது?

nathan

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:

nathan

பூப்பெய்திய பெண் பிள்ளைகளுக்கு என்னதாங்க சாப்பிட கொடுக்கணும்…..

nathan

குதிகால் வலியை போக்கும் பயிற்சி

nathan

ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா

nathan

எடையைக் குறைக்க ஓர் எழிய வழி

nathan