36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…மூல நோய் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

பைல்ஸ் என்பது ஆசன வாயில் உள்ள நரம்புகளில் வீக்கம் மற்றும் கடுமையான வலியை ஏற்படுத்தும் கொடுமையான பிரச்சனையாகும்.

ஒருவருக்கு பைல்ஸ் இருந்தால், ஆசன வாயில் இரத்தக்கசிவு, மலம் கழிக்கும் போது வலி, இரத்தம் கலந்த மலம், அடிவயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் ஆசன வாயில் அரிப்பு போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவார்.

பைல்ஸ் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்தால், நிலைமை மோசமாவதைத் தடுக்க முடியும். அதுவே கண்டு கொள்ளாமல் விட்டால், ஆசன வாயில் புண் மற்றும் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பைல்ஸ் எந்த காரணங்களால் ஒருவருக்கு ஏற்படும் என்பதை விரிவாக பார்ப்போம்:

மூல நோய்கள் பல வகைப்படும். இந்த பிரச்சனை 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகமாக பாதிக்கிறது. ஆனால், தற்போது சில இளம் வயதினருக்கு கூட இப்பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள்.

மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாக்கும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்தல்,

அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றகளால் ஏற்படுகிறது.

மலம் கழிக்க முடியாமல், கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்து மலம் கழிக்க முயற்சித்தால், ஆசன வாயில் உள்ள நரம்புகள் காயமடையும். இது பைல்ஸை உண்டாக்கும்.

எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் கூட மலம் இறுக்கமடையும். இதுவும் பைல்ஸ் வருவதற்கு காரணமாகிறது.

மலச்சிக்கலால் குடலில் மலம் பல நாட்களாக தேங்கிவிடும். ஒரு கட்டத்தில் அதை வெளியேற்றும் போது, அதனால் ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். இதனால்கூட பைல்ஸை உண்டாக்கும்.

கர்ப்ப காலத்திலும் பைல்ஸ் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் வயிற்றில் உள்ள குழந்தை மலக்குடலில் அதிக அழுத்தம் கொடுக்கும் போது, ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுகிறது. இதனால்கூட பைல்ஸ் வருகிறது.

வயிற்றுப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், தொடர்ச்சியாக மலம் க

Related posts

குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன?

nathan

அவசியம் படிக்க.. மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஜூஸ்கள்!

nathan

இதயநோய் வராமல் தடுக்கும் சீதாப்பழம்

nathan

இந்த பகுதியில் வலி ஏற்பட்டால் கவனமாக இருக்கவும்

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு மார்பகங்களின் வடிவத்தை நன்றாக மாற்றிட சில வழிகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்..இந்த யூக்கலிப்டஸ் தைலத்தை தடவிறீங்களே… இது நுரையீரல்ல போய் என்னல்லாம் செய்யும்னு தெரியுமா?…

nathan

சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லையா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

மெற்போமின்மருந்தைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுமா?

nathan

தொலைந்துபோன நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள்!

nathan