தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 20 கிராம்,
கறிவேப்பிலை, மிளகு, மிளகுத்தூள் – தலா 5 கிராம்,
பூண்டு – 10 கிராம்,
பனீர் – 50 கிராம்,
பால் – 100 மில்லி,
மைதா – 25 கிராம்,
வெண்ணெய் – 20 கிராம்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கடாயில் வெண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, பனீர், கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வதக்கவும்.
• வதங்கியதும், மைதா சேர்த்து மேலும் வதக்கவும்.
• அதில் பால் சேர்த்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
• இதை வடிகட்டியில் வடிகட்டி, மிளகுத்தூள் தூவி, உப்பு சேர்த்து, துருவிய பனீர் கொண்டு அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.