திராட்சை பழத்திலும், அதன் விதையிலும் உடலுக்கு பயன் தரும் பல நல்ல சத்துக்கள் உள்ளன.
எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகம் உண்டு.
அதுமட்டுமின்றி கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது.
திராட்சை விதை சாறனது உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது என சொல்லப்படுகின்றது.
அந்த வகையில் கருப்பு திராட்சை விதையினை உட்கொள்ளுவதனால் ஏற்படும் மருத்துவப்பயன்கள் என்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
வைட்டமின்-சியை விட இருபது மடங்கு சக்தியுள்ளதால் ரத்தக் கொதிப்பு நோய்க்கு அரு மருந்தாகப் பயன்படுகிறது.
ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது.
ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.
சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரிசெய்யப் பயன்படுகிறது. மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது.
பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது.
வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.