படித்த பட்டதாரிகள் முதல் பாமர மக்கள் வரை சொல்லும் பொதுவான
முட்டாள் தனமான ஒரே
பதில் எல்லாரும் இதை தானே சாப்பிடுறாங்க நாங்களும் சாப்பிடுறோம்.
எல்லாரும் செய்வதால் தவறு சரி ஆகி விடாது.எல்லாரும் சாப்பிடுவதால் விஷம் அமிர்தம் ஆகி விடாது.
சாக்லேட்,சிப்ஸ்,நூடுல்ஸ் எல்லாம் குழந்தைக்கு கொடுக்காதீங்க அது எல்லாமே விஷம்னு தெரியாதா?
குழந்தை ஆசைப்படுதுனு வாங்கி கொடுத்தோம் இது இன்னொரு அலட்சியமான பதில்.
பெற்றோர்கள் கவனத்திற்கு குறிப்பாக பெண்களுக்கு தயவு செய்து இனியும் இந்த விளம்பரத்தில் வரும் வெளிநாட்டு
கார்பொரேட் பொருட்களை (குப்பைகளை) குழந்தைகளுக்கு கொடுத்து அவர்கள் ஆரோக்கியத்தோடு விளையாடாதீர்கள
அது நீங்கள் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.ஒரு புடவை வாங்கவே 10 கடை ஏறி இறங்குகிறோம். கேவலம் 3 மணி நேர சினிமாவுக்காக கால் கடுக்க நிற்கிறோம். ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் மட்டும் ஏன் இந்த சோம்பேறித்தனம்.ஆரோக்கியமான நம் பாரம்பரிய விவசாய பொருட்களை தேடி வாங்கி கொடுங்கள். மேலும் நம் பாரம்பரிய
உணவு முறை குறித்த குறைந்த பட்ச விழிப்புணர்வையாவது அவர்களுக்கு கொடுங்கள்.நீங்கள் மாறாமல் இங்கு எதுவும் மாறாது.இன்று நீங்கள் வெள்ளை சர்க்கரை தானே, சாக்லட் தானே, நூடுல்ஸ் தானே, சிப்ஸ் தானே என்று சாதாரணமாக கடந்து சென்றால் உங்கள் குழந்தைகள் சர்க்கரை நோயே தானே,புற்று நோய் தானே, மாரடைப்பு தானே என்று சாதாரணமாக கடந்து போக வேண்டி இருக்கும்.நான் சொல்லும் விதம் தவறாக இருக்கலாம். ஆனால் உங்கள் அலட்சியம் அதை விட தவறானது.
மாறுங்கள்.. மாற்றுங்கள்..!