உடல் பயிற்சிகர்ப்பிணி பெண்களுக்குமருத்துவ குறிப்பு

கர்ப்ப காலத்தில் வரும் முதுகு வலி, கால் வீக்கத்தை போக்கும் யோகா

கர்ப்ப காலத்தில் வரும் முதுகு வலி, கால் வீக்கத்தை போக்கும் யோகா
ஆசனம், மூச்சுப்பயிற்சி, கிரியை, தியானம் போன்றவை யோகப் பயிற்சியின் பகுதிகள். பரபரப்பு நிறைந்த வாழ்க்கையும், மாசுபடிந்த சுற்றுச்சூழலும் சாதாரணப் பெண்களையே பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக்கிவிடுகிறது என்றால், இன்னொரு உயிரைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் வலிமை பெற உதவுகின்றன யோக பயிற்சிகள்.கருவுற்ற 6,  7- வது வாரத்தில் இருந்தே, எளிமையான மூச்சுப்பயிற்சிகளில் இருந்து ஆரம்பிக்கலாம். ஆசனங்களைச் செய்வது மட்டுமே முக்கியம் அல்ல; ஆசனத்தைச் செய்வதற்கு முன், உடலைத் தயார்செய்வதும் (Warm up) முக்கியம். இந்தப் பயிற்சிகள் ஒவ்வொன்றையும் சுமார் 5 முறை செய்யலாம். உடலில் சோர்வு இருந்தால் பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது.வெறும் மூச்சுப்பயிற்சிகளையும், உடலைத் தளர்த்தும் பயிற்சிகளையும் சில எளிய ஆசனங்களையும் செய்து வந்தால், கர்ப்பிணிகளின் உடல் இறுக்கம் தளரும். முதுகு வலி, கால் வீக்கம், பிரசவகாலச் சர்க்கரை நோய் போன்றவை வராமல் தடுக்கும். மேலும், முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்திருந்தாலும்கூட, இரண்டாவது குழந்தை சுகப்பிரசவத்தின் மூலம் பிறக்கும் வாய்ப்பு ஏற்படும்.வார்ம் அப் பயிற்சிகள்: 1. காலைத் தூக்கும் பயிற்சி (Leg Lifting Posture)

• கைகளைத் தொங்கவிட்டு, கால்களை சற்றே அகட்டிவைத்து, நேராக நிற்கவும்.

• வலது காலை இடுப்பு உயரத்துக்குத் தூக்கி, அதே சமயம் இடது கையை மேலே தூக்கவும்.

• இதேபோல் இடது கால், வலது கையைத் தூக்கிச் செய்யவும்.

Related posts

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமா?

nathan

மருத்துவ செய்தி ஆரோக்கியம் தரும் சோளம்

nathan

ஆண்களின் பழைய வாழ்க்கையால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

தீராத சளி த்தொல்லை தீர…..

nathan

உங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan

தலைமுடியை வலிமையாக்கும் சில வீட்டு வைத்தியங்கள்!

nathan

பெண்களின் வெள்ளை படுதலுக்கான-சித்த மருந்துகள்

nathan

தூதுவளை மருத்துவ பயன்கள்! ~ பெட்டகம்

nathan

கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

nathan