மருத்துவ குறிப்பு

இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக் கொள்கிறவர்கள் கவனிக்க! தெரிஞ்சிக்கங்க…

இரும்புச் சத்து நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுகிற ஒரு சத்தாகும். இரும்புச் சத்து குறைபாடு என்பது இன்றைக்கு மிகவும் சாதரணமான ஒரு குறைபாடாக இருக்கிறது குறிப்பாக பருவ வயது பெண்கள் மத்தியில் இந்த குறைபாடு அதிகமாக காணப்படுகிறது.

இந்த குறைபாடு இருப்பவர்கள் எப்போதும் அனீமிக்காக அதாவது உடலுக்கு போதிய ரத்தம் இல்லாமல் காணப்படும். மிக குறைந்த அளவில் இரும்புச்சத்து இருப்பவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இரும்புச் சத்து

இரும்புச்சத்து மாத்திரை எடுப்பவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என சில அத்தியாவசிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

அறிகுறிகள் :

உடலுக்கு போதிய அளவு இரும்புச் சத்து கிடைக்கவில்லை என்றால் உங்களது எலும்பு வலிக்கிற அளவிற்கு உடல் வலி இருக்கும். காரணமே இல்லாமல் அதீத உடல் சோர்வு ஏற்படும். அதிகமாக முடி கொட்டும்,தைராய்டு சுரப்பி சுரப்பது குறையும்.

தைராய்டுக்கு இரும்புச் சத்து தான் முக்கியமானது. அவை குறையும் போது தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளும் குறைந்திடும். மயக்கம் ஏற்படுவது, தலைச்சுற்றல்,கவலை,போன்றவை இருக்கும். சிலருக்கு தலைவலி,படபடப்பு ஆகியவையும் ஏற்படும்

இதையும் கவனிங்க :

பெரும்பாலும் மேற்ச்சொன்ன அறிகுறிகள் மட்டுமே இரும்புச் சத்து குறைபாட்டிற்கு சொல்லப்படுகிறது இதனையும் தாண்டி சில அறிகுறிகள் ஏற்படலாம். பெரும்பாலும் நாம் கவனக்குறைவாக விடுவது தான் அது, நாட்கணக்கில் இது தொடர்ந்தால் உடனடியாக மருத்துவக் கண்காணிப்பிற்கு செல்வது நல்லது. சருமத்தில் மாற்றம் உண்டாவது, அதீத வறட்சியால் சருமம் பாதிக்கப்பட்டது போல இருக்கும்.

மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி, கை கால்கள் சில்லிட்டுப் போவது, சுவையறிவதில் சிக்கல் உண்டாவது, நகம் அடிக்கடி உடைவது, பசியின்மை, அல்லது எதுவுமே சாப்பிடாமல் வயிறு நிறைவான உணர்வைக் கொடுப்பது. இந்த அறிகுறிகள் எல்லாம் தொடர்ந்து நீடித்தால் உடனடியாக மருத்துவக் கண்காணிப்பிற்கு சென்று விடுவது நலம்.

காரணங்கள் :

இதற்கு நம்முடைய வாழ்க்கை, உணவுப் பழக்கம் ஆகியவற்றை பொருத்து ஒவ்வொருவருக்கும் காரணங்கள் வேறுபடலாம். தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இரும்புச் சத்துள்ள உணவுகளை எடுக்காமல் இருப்பவர்களுக்கு இந்த குறைபாடு உண்டாகும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அதே போல வைரஸ் தாக்குதல் அல்லது ஏதேனும் நோய் பாதிப்பு உண்டானால், இன்னபிற விட்டமின் சத்துக்கள் கிடைக்கவில்லை என்றாலும் இரும்புச் சத்து பற்றாகுறை ஏற்பட வாய்ப்புண்டு.

பெண்கள் :

இந்த இரும்புச் சத்து குறைபாடு பிரச்சனை குறிப்பாக பெண்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. ஆம், பெண்களுக்கு சத்தான ஆகாரம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கும் அதேவேளையில் அவர்களுக்கு மாதவிடாயினால் மாதந்தோரும் ரத்தம் வெளியேறுகிறது.

இவற்றால் பெண்கள் சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பதே நல்லது.

இரண்டு வகை :

நமக்கு கிடைக்கக்கூடிய இரும்புச் சத்தினை இரண்டு வகைகளாக பிரிக்கிறார்கள். ஒன்று ஹீம் மற்றும் நான் ஹீம். இவற்றில் ஹீம் என்பது அசைவ உணவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய இரும்புச் சத்து நான் ஹீம் என்பது சைவ உணவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய இரும்புச் சத்து.

தற்போது இந்த இரண்டு வகைகளைப் பற்றியும் அதனை எடுத்துக் கொள்ளும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய, கூடுதலாக சேர்க்க வேண்டியவை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

உணவுகள் :

நாம் சாப்பிடுகிற உணவுகளை சைவம் மற்றும் அசைவம் என இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. இவற்றிலிருந்து தான் நமக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.

சைவ உணவிலிருந்து கிடைக்கக்கூடிய இரும்புச் சத்து நம் உடல் கிரகித்துக் கொள்ள மிகவும் தாமதமாகிடும். அசைவ உணவிலிருந்து கிடைக்கக்கூடிய இரும்புச் சத்தினை நம் உடல் வேகமாக கிரகத்திக் கொண்டு விடும்.

காபி,டி :

பெரும்பாலனவர்களுக்கு காபி டி போன்ற பானங்கள் குடிக்கும் வழக்கம் இருக்கிறது.ஒரு நாளைக்கு அதிகமாக தொடர்ந்து குடித்து வர, இவை நம் உடலின் இரும்புச் சத்து கிரகிக்கும் தன்மையை குறைத்துவிடுகிறது.

சாப்பிட்டவுடன் காபி, டி குடிப்பது தவறானது. உணவுக்கு முன்பாக குடிக்கலாம் அதுவும் குறைந்தது ஒரு மணி நேரம் முன்னதாக குடித்துவிட வேண்டும்.

பால் :

இரும்புச் சத்து குறைவாக இருக்கும் போது நமக்கு மிகவும் டயர்டாக இருக்கும், சுறுப்பாக இருக்கும், தூக்கம் கலையும் என்று சொல்லி அதிகமாக காபி,டி யை குடிப்பார்கள். இது தவறானது,

பால் கூட நம் உடலில் சேருகின்ற இரும்புச் சத்தினை கிரகத்துக் கொள்ளும் தன்மையை குறைத்துவிடும். இரும்புசத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது.

தானியங்கள் :

தானியங்களில் ஃபைடேட்ஸ் என்ற சத்து இருக்கிறது. இதனை நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது, இவை அதிகப்படியாக நம் உடலில் சேர்ந்து அவை இரும்புச் சத்து கிரகித்துக் கொள்ளும் தன்மையை குறைத்துவிடும்.

இந்த ஃபைடேட்ஸ் இரும்புச் சத்தினை மட்டுமல்லாது வேறு சில மினரல்ஸ் கிரகிக்கும் தன்மையை சீர்குலைக்கும். அதனால் தான் சைவ உணவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய இரும்புச் சத்து நம் உடலில் சேர அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்று சொல்லப்படுகிறது.

சமைக்கும் முறை :

இவ்வளவு விஷயங்களை பார்த்து இரும்புச் சத்து இருக்கிற பொருட்களைத் தேடி எடுத்துக் கொண்டாலும் நீங்கள் சமைக்கும் முறையினால் அவை குறைந்திட வாய்ப்புண்டு. அதிக நேரம் கொதிக்க வைப்பது,நீண்ட நேரம் வேகவைப்பது ஆகியவை செய்யக்கூடாது.

11 பேலன்சிங் :

இரும்புச் சத்து அதிகமாக உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்வது மட்டுமே இதற்கு தீர்வாகாது. மாறாக நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு பேலன்சிங் உணவாக இருக்க வேண்டும். இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தால் போதாது அதனை கிரகித்துக் கொள்ள உதவக்கூடிய உணவுகளை கூட எடுத்துக் கொண்டால் தான் நீங்கள் சாப்பிட்ட உணவு தன் வேலையை சரிவர செய்திடும்.

இரும்புச் சத்து கிரகித்துக் கொள்ள விட்டமின் ஏ,சி ஃபோலைட் மற்றும் ரிபோஃபலின் ஆகியவை தேவைப்படுகிறது.

கூடுதலானால் :

பெரும்பாலானோருக்கு இந்த சந்தேகம் இருக்கக்கூடும். நாம் தொடர்ந்து இரும்புச் சத்து உணவுகள் அல்லது சப்ளிமெண்ட் எடுத்துக் கொண்டிருந்தால் உடலில் இருக்கவேண்டிய அளவினைத் தாண்டி கூடுதலாக இரும்புச் சத்து சேர்ந்திடும்,இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடுமா என்று அஞ்சுவீர்களானால் இதைப் படியுங்கள்

குழந்தைகளுக்கு இரும்புச் சத்து அதிகமானால் மரணம் கூட நிகழலாம். அதனால் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் குறிப்பிட்ட காலத்திற்கு கொடுத்தால் நல்லது.

பிறர் :

ஆண்கள் மற்றும் மெனோபாஸ் காலம் முடிந்திருக்கிற பெண்களுக்கும் இது சில சிக்கல்களை ஏற்படுத்தலாம். அதனால் இரும்புச் சத்து மாத்திரைகளை வருடக்கணக்கில் தொடராமல் குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது.

ஒவ்வாமை :

தொடர்ந்து இரும்புச் சத்து உணவுகளை எடுத்துக் கொள்வதாலும், அல்லது இரும்புச் சத்து மாத்திரைகளை சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.

Ferric and ferrous இவை தான் பெரும்பாலும் இரும்புச் சத்துக்கான சப்ளிமெண்ட்டாக அளிக்கப்படும். இவற்றில் ஃபெர்ரிக் எளிதாக உடலில் கிரகித்துக் கொள்ளப்படும். ஆனால் இவை குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அதிகமாக தொடரும் பட்சத்தில் மலச்சிக்கல்,வயிற்றுவலி, ஒமட்டல் ஆகியவை ஏற்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button