மருத்துவ குறிப்பு

கொழுப்பை கரைக்கும் – இதய நோயாளிகளுக்கு அற்புத உணவான பார்லி

பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை.

ஆனால், அப்படி மறந்து ஒதுக்க முடியாத அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு பொருள் பார்லி.

* குறைந்த கலோரி கொண்ட உணவான பார்லி, இயற்கையான எடைக் குறைப்புக்கு உதவுகிறது. உடல்நலம் சரியில்லாத போது, நார்ச்சத்து குறைவான உணவுகளையே உட்கொள்ளச் சொல்வார்கள் மருத்துவர்கள். அதற்குப் பொருத்தமான உணவு பார்லி. எளிதில் செரிமானமாகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டான புண்களை ஆற்றும். அதனால்தான் காய்ச்சலில் படுத்தவர்களுக்கு பார்லி கஞ்சி கொடுக்கும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது.

* இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான ஒரு உணவு. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால், இது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதனால்தான் இதய நோயாளிகளுக்கு பார்லி நல்லது.

* பார்லியில் பீட்டா க்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. இந்த பீட்டா க்ளூக்கோனானது, பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும். அதனால், இதய நோயாளிகளுக்கு அரிசி உணவுகளுக்குப் பதில் பார்லி அதிகம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்ற வல்லதால், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

* பார்லியில் நயாசின் என்கிற பி வைட்டமின் அதிகம். மேலும் இதிலுள்ள லிப்போ புரோட்டீன் (புரதமும் கொழுப்பும் கலந்த ஒரு சத்து) மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு அந்தப் பருவத்தில் இயல்பாக எகிறக் கூடிய எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறையும். அதனால் உடலில் தண்ணீர் தேக்கம் அதிகமிருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் முகமெல்லாம் வீங்கிக் காணப்படும். அந்தப் பிரச்சனைக்கு பார்லி எடுத்துக் கொள்வது பலனளிக்கும்.
ee92b5a5 d902 4135 abd9 99c947aee077 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button