குடும்பத்தில் யாரேனும் உடல் பருமனாக இருந்தால், உடல் பருமன் ஏற்படும். தைராய்டு, டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பு குறைபாடான Hypogonadism, அதீத ஹார்மோன் சுரப்பை உண்டாக்கும் Cushing syndrome போன்றவையும் பருமனை உண்டாக்கும்.
கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டாலும் உடல் பருமன் உண்டாகும். பெண்கள் 40 – 60 வயது வரை உள்ள பெண்கள் வீட்டில் உணவு வீணாகி விடக் கூடாது என மீதியுள்ள உணவை உண்பதால் உடல் பருமன் ஏற்படுகிறது. கொழுப்பு நிறைந்த உணவை உண்டுவிட்டு, உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் உடல் பருமன் ஏற்படும். குடிப்பழக்கம், புகைபிடிப்பது போன்றவையும் உடல் பருமனை உண்டாக்குகிறது.