கழுத்தைச் சுற்றி காணப்படும் தொங்கும் தசைகள் உடல் பருமன் காரணமாகவே ஏற்படுகிறது. மேலும் வயதாகுதல், நீர் தேக்கம், ஹைப்போ தைராய்டிசம், பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் போன்ற காரணங்களாலும் கழுத்தைச் சுற்றி சதை ஏற்படும்.
இதுபோன்ற தொங்கும் கொழுப்புகளை உடனே கரைக்க வேண்டும். இல்லையெனில் இதய நோய்கள், டயாபெட்டீஸ் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இதோ அதற்கான வழிமுறைகள் உங்களுக்காக!!!
கிரீன் டீயில் பாலிபினோல் மற்றும் ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இது உடல் எடையை குறைக்க உதவும். எனவே கிரீன் டீயை தொடர்ந்து, ஒரு நாளைக்கு 2 1/2 கப் குடித்து வந்தாலே கழுத்தில் தொங்கும் சதையை குறைக்க முடியும்.
முலாம்பழத்தில் விட்டமின் A, பொட்டாசியம் மற்றும் குறைந்த கலோரி, குறைந்த கொழுப்புகளைக் கொண்ட ஏராளமான விட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. எனவே, முலாம்பழத்தை ஜூஸ் செய்து பருகி வருவதன் மூலம், கழுத்தில் உள்ள கொழுப்பை கரைக்க முடியும்.
தேங்காய் எண்ணெய் உங்கள் கழுத்தில் தங்கியிருக்கும் கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது, உடலில் உள்ள மெட்டா பாலிசத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்க உதவும்.
கழுத்தில் தேங்காய் எண்ணெய்யை கொண்டு, தினமும் 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். மேலும், சமையலில் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலம் கழுத்தில் தொங்கும் சதையை குறைக்கலாம்.
எலுமிச்சை ஜூஸை குடித்து வருவதன் மூலம் கழுத்தில் தொங்கும் சதையை எளிதில் குறைக்கலாம். மேலும், இதன்மூலம் உடல் எடையும் வேகமாக குறையும். எலுமிச்சையில் உள்ள விட்டமின் C உடலில் உள்ள மெட்டா பாலிசத்தை அதிகரிக்கும். இதனால் கொழுப்புகள் விரைவில் கரையும்.