29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

வைத்திய குறிப்புகள்…!! ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள

ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம்.

அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இரத்த உற்பத்திக்கு நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலதைக் கொடுப்பதுடன் உடலில் இரத்தம் அதிகமாக ஊறும்.

தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்தி பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.

தக்காளி பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும். பசியை தூண்டும் தன்மை கொண்டது.

பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.

Related posts

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

அதிகமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத 5 உணவுகள்

nathan

குழந்தைகளுக்கு முன் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்..! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிந்துகொள்வோமா? ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தும் அறிகுறிகள்

nathan

படர்தாமரை முற்றிலும் குணமாக

nathan

பீர் குடித்ததால் வந்த தொப்பையை குறைக்க ஈஸி வழி! ! தெரிஞ்சிக்கங்க…

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! சர்க்கரை நோயை விரட்டியடிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

nathan

இந்த 5 ராசிக்காரங்க திருமண வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுவாங்களாம்…

nathan

முதலிரவு அன்று ஏன் தம்பதிகளுக்கு பால் கொடுத்து படுக்கையறைக்கு அனுப்புகிறார்கள் தெரியுமா?

nathan