தேவையான பொருட்கள் :
வெள்ளை கொண்டைக்கடலை – அரை கப் பாலக்கீரை – ஒரு சிறிய கட்டு, வெங்காயம் – 2, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய்- 1, இஞ்சிபூண்டு விழுது – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா 1/4 டீஸ்பூன், சீரகத்தூள் – , கரம்மசாலாத்தூள் – தலா 1/4 டீஸ்பூன், சீரகம் – 1/4 டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1) கொண்டைக் கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, வேக வைத்துக் கொள்ளவும்.
2) பாலக்கீரையை சுத்தம் செய்து பச்சை மிளகாயுடன் கீரையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
3) கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி – பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளியை விழுதாக அரைத்து சேர்த்து,உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
4) பிறகு, அரைத்த கீரை விழுதை சேர்க்கவும். இதனுடன் வெந்த கொண்டைக்கடலையை சேர்க்கவும்.
5) தேங்காய் துருவல் தூவி இறக்கினால் கொண்டைக்கடலை கீரை சுண்டல் ரெடி.