35.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
tyuiytiuy
ஆரோக்கிய உணவு

முருங்கைப்பூ வின் மகத்துவம் பற்றி அறிந்தால் இனி முருங்கைப்பூ சமையலை விரும்பி செய்வீர்கள்.

இரும்புச்சத்துக்குறைபாட்டை நீக்குவதில் முருங்கையின் பங்கு அளப்பரியது என்பது தெரியும். முருங்கையின் இலை, வேர், பூ, பட்டை, காய் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டது. 30 வருடங்களுக்கு முன்பு எல்லோர் வீட்டிலும் முருங்கை மரம் இருக்கும்.

அதனால் வாரம் இருமுறையாவது முருங்கைப் பூ, முருங்கை இலை, முருங்கைக்காய் என்று சமையலில் தவறாது இடம்பெற்று விடும்.

வேண்டிய அளவு கீரையை எங்கிருந்து வேண்டுமானாலும் பறித்து வந்து சமைத்து விடுவார்கள் அம்மாக்கள். பிரசவக்காலத்தில் கூட பெண்கள் இரத்தசோகை குறைபாட்டை அனுபவித்ததில்லை. இரத்த சோகையைத் தடுக்கும் அளவுக்கு அவர்களது உணவு முறை இருந்ததே இதற்கு கார ணம்.

முன்னோர்கள் எந்தவிதமான நோய்க்கும் உணவு மூலமே சரிசெய்ய பார்ப்பார்கள். உணவையே மருந்தாக்கி கொடுத்து நோய்க்கு தீர்வு காண்பார் கள். இயற்கை கொடுக்கும் உணவு பொருள்களைth தவிர்க்காமல் பயன்படுத்தியதால் தான் ஆரோக்யம் குறையாமல் செஞ்சுரி கடந்த வாழ்க்கை யை வாழ்ந்தார்கள். இப்போது உடலின் சீரான இயக்கத்துக்கு முக்கிய காரணமான இரத்தமே போதிய அளவில் இல்லை என்பது தான் முக்கிய பிரச்னையாக இருக்கிறது.

இப்போதும் முருங்கை இலையை மட்டுமே பொரியலாக்கி சாப்பிடுகிறோம். முருங்கைப்பூவை தனியாக சமைப்பது கிடையாது. முருங்கைப்பூ வின் மகத்துவம் பற்றி அறிந்தால் இனி முருங்கைப்பூ சமையலை விரும்பி செய்வீர்கள்.
tyuiytiuy
முருங்கைப்பூ பயன்கள்:
கண்களுக்கு வேலை கொடுக்கும் பணியில் தான் இன்று அநேகம் பேர் இருக்கிறோம். இதனால் கண்களில் உஷ்ணமும் அதிகமாகிறது. உடல் உஷ்ணத்தைப் போக்கவும், கண்களின் சூட்டை தணிக்கவும் நல்லெண்ணையை உடலில் மசாஜ் செய்து கண்களுக்கு கட்டுவது வழக்கம். ஆனால் இன்று நல்லெண்ணெய் குளியல் என்பது மறந்துவிட்ட ஒன்றாகிவிட்டது.

கண்களுக்கு குளிர்ச்சியை உண்டாக்கக்கூடிய சிறந்த மருத்துவகுணத்தைக் கொண்டிருக்கிறது முருங்கைப்பூ.நீரை கொதிக்க வைத்து சுத்தம் செய்த முருங்கைப்பூவை சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் கண்கள்குளிர்ச்சி அடையும்.

சீரற்ற மாதவிடாய் பிரச்னைகளைக் கொண்டிருப்பவர்கள் முருங்கைப்பூவை துளி பசும்பால் விட்டு அரைத்து வைக்கவும். காய்ச்சிய பசும்பாலை கொதிக்க விட்டு, அரைத்த முருங்கைப்பூவை சேர்த்து இனிப்புக்கு பனங்கருப்பட்டி சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறினால் லேகியப்பதத் துக்கு வரும். இதை ஒரு டப்பாவில் வைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்னை நீங்கும்.மேலும் கருப்பை பிரச்னை, கருமுட்டையில் குறைபாடு இருந்தாலும் அவற்றை சரிசெய்யும்.

சித்தர்களின் மருத்துவக் கூற்றுப்படி ஒவ்வொரு மனிதனின் உடலிலும் வாதம், பித்தம், கபம் மூன்றும் சம நிலையில் இருந்தால் நோய்கள் அண் டாது என்பதே.அதனால் இவை மூன்றையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அதிகப்படியாக சுரக்கும் பித்தநீரைக் கட்டுப்படுத்த முருங் கைப்பூவை கஷாயமாக்கி வடிகட்டி குடித்து வந்தால்உடலில் வாத பித்த கப மூன்றின் செயல்பாடுகளும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

முருங்கைப்பூ மொத்தமாக கிடைக்கும் போது வாங்கி சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும். காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் அரை டீஸ்பூன் பொடி, பனங்கருப்பட்டி சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு சக்தி கிடைக்கும். வளரும் குழந்தைகளுக்கும் கொடுத்து வரலாம்.

இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைந்தவர்கள் இருபாலருக்குமே இயற்கையான மருந்து முருங்கைப்பூ. பசும்பாலுடன் முருங்கைப்பூவை சேர்த்து காய்ச்சி ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இல்லற வாழ்வின் மீது நாட்டம் உண்டாகும். ஆண்மை பெருக்கும் வல்லமைக் கொண்டது முருங் கைப்பூ.

Related posts

சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் சாப்பிட்டுள்ளீர்களா?

nathan

ஆரோக்கிய டிப்ஸ்

nathan

காபிக்கு பதில் குங்குமப்பூ நீர் குடிங்க, சூப்பர் டிப்ஸ்…

nathan

skin benefits of watermelon – சருமம் பொலிவாக தர்பூசணி

nathan

Food Poison ஆயிடுச்சா? இதோ எளிய நிவாரணம்! இயற்கை வைத்தியம் இருக்கு!

nathan

காலை எழுந்த பின் ஒரு டம்ளர் வேப்பில்லை சாறு குடித்தால் போதும்! தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் ஆறு வகையான தேநீர்!!!

nathan

Frozen food?

nathan

நீங்கள் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டால், இனி சர்க்கரையை தூக்கி எரிந்து விடுவீர்கள்!! அவசியம் படிக்கவும்….

nathan