பொதுவாக மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும் என்கிறது மருத்துவம்.
அதிகமான தண்ணீர் அருந்துவது நமது உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமான ஓன்று. அதிலும் குறிப்புக்காக காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன.
அதேபோல் குளிர்ந்த நீரை விட காயவைத்த நீரை குடிப்பதனால் மேலும் பல்வேறு நன்மைகள் உள்ளன. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலை எழுந்ததும் வெந்நீர் அருந்தினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய வெந்நீர் உதவுகிறது.
நம்மில் பெரும்பாலானோருக்கு செரிமான பிரச்சனை இருக்கும். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் காலை உணவுக்கு முன் சற்று வெந்நீர் அருந்திவிட்டு சிறிதுநேரம் கழித்து உணவை எடுத்துக்கொண்டால் எளிதில் செரிமானம் அடையும்.