27.1 C
Chennai
Saturday, May 24, 2025
ஆரோக்கிய உணவு

மூல நோயைத் துரத்தும் துத்திக்கீரை

 

மூல நோயைத் துரத்தும் துத்திக்கீரை

மஞ்சள் நிறத்தில் பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை. துத்தியின் இலைகள் இதய வடிவில் இருக்கும். மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்து துத்தி. இதன் இலையை வதக்கி கட்ட மூல முலைகள் மற்றும் புண்கள் ஆறும்.

மலச்சிக்கலுக்கு துத்தி கீரை சிறந்த மருந்து. இன்றைய பரப்பரப்பான வாழ்க்கை சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகிறார்கள். மலச்சிக்கல் ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு. நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாவுப்பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை உண்டாகிறது.

குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன. துத்தி இலை குடல் புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி வெளியேற்ற உதவுகிறது. துத்திக்கீரையை சமைத்து சாப்பிடலாம். துத்தி இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி மூலத்தில் கட்ட மூலத்தில் உள்ள வீக்கம், வலி, குத்தல் மற்றும் எரிச்சல் நீங்கும்.

ஆசனவாயில் கடுப்பு மற்றும் எரிச்சலுடன் கூடிய வலி இருக்கும் சமயம் துத்திக்கீரை ஒரு கைப்பிடி எடுத்து அதை 100 மி.லி. நீரில் கொதிக்க வைத்து சிறிது பால், பனங்கற்கண்டு கலந்து பருக வலி குறையும். துத்தி இலையை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்க பல் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.

அதிக சூட்டினால் வெண்களுக்கு உண்டாகும் வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல், உடலில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலை ஒரு கைபிடி எடுத்து 100 மி.லி. நீரில்ல் கொதிக்க வைத்து பருகலாம். வெப்ப கட்டி மற்றும் மூலத்தில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலை சாறை அரிசிமாவில் களியாக கிண்டி கட்டிகளில் மேல் வைத்து கட்டி வந்தால் வெப்பக்கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

உடலில் உள்ள தசைகளுக்கு பலத்தை அளிப்பதால் இதற்று அதிபலா என்ற வேறு பெயரும் உண்டு. இதன் இலையில் உள்ள தாவரக் கொழுப்பு மற்றும் பல வேதியியல் பொருட்களில் புரரம் மற்றும் வலி நீக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பல சித்த மருந்துகளில் துத்தி சேர்க்கப்படுகிறது. வட மாநிலத்தில் உள்ள ஓர் இனத்தை சார்ந்த பழங்குடி மக்கள் துத்தி இலையின் பொடியை கோதுமை மாவுடன் கலந்த ரொட்டியாகத் தயாரித்து சாப்பிடுகின்றனர்.

கருப்பை சார்ந்த நோய்கள் தீர இவ்வாறு தயாரித்து சாப்பிடும் பழக்கம் அவர்களிடம் உள்ளது. பூஞ்சை நோய் காரணமாக தோலில் உண்டாகும் படர்தாமரை நோய்க்கு துத்தி இலையை அரைத்து பூச நன்கு குணம் தெரியும். மூலநோய் உள்ளவர்கள் துத்திகீரையை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் இந்த நோயில் இருந்து விரைவில் விடுதலை அடையலாம்.

Related posts

கருத்தரிப்பதில் பிரச்சனைக் கொண்டவரா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்த இதை செய்யங்கள்!…

sangika

உங்களுக்குதான் இந்த விஷயம்..இடுப்புச் சதை குறையனும்னா, கண்ணை மூடிட்டு கண்டிப்பா இந்த 7 உணவு வகைகளுக்கு நோ சொல்லனும்!

nathan

சூரியகாந்தி எண்ணெய் சமையலுக்கு நல்லதா?

nathan

பஜ்ஜி, போண்டா, கெ.எப்.சி, சிக்கன் 65 அதிகமா சாப்பிட பிடிக்குமா? அப்ப நீங்க இதப் படிச்சே ஆகணும்!

nathan

முயன்று பாருங்கள் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு நாளைக்கு 3 முந்திரி பருப்பு!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆபத்தான நோயான ரத்த அழுத்தத்தை தடுக்கும் நெல்லிக்காய் வத்தல்!

nathan

தர்பூசணி பழம் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்

nathan

சத்தான துவையல் செய்வது எப்படி?

nathan