28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
190853258f5205de8fe9578c98fa62553a125f2e2
ஆரோக்கியம் குறிப்புகள்

சிறந்த பயன்தரும் சித்த மருத்துவ குறிப்புகள்

வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும். முட்டைகோஸ் உடன் பசுவின் வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும். இருமல், தொண்டை கரகரப்புக்கு பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும். பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும். பீட்ரூட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப் புண் குணமாகும். கேரட் சாறும் தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும்.

உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும். வெண்டைப்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும் சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

40 வயதுக்கு மேற்பட்ட ஒரு சிலருக்கு கண்ணாடி இல்லாமல் எதுவும் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பர். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்து காய வைத்து பொடி செய்து, தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளெழுத்து மாறும், கண்ணில் உண்டாகும் வெண்படலமும் மாறும். கடுமையான தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். ஜளதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து சாப்பிட்டால் குணமாகும். பிரயாணத்தின்போது வாந்தியை நிறுத்த தினம் ஒரு நெல்லிக்கனியை தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.

190853258f5205de8fe9578c98fa62553a125f2e2

Related posts

ரமழான் நோன்பும் உடல் ஆரோக்கியமும் : முக்கிய குறிப்புகளுடன்,,,!

nathan

கண்ணீரால் கரையும் தீமைகள்

nathan

பெண்களே வீட்டிற்கான அவசியமான மழைக்கால பராமரிப்புகள்

nathan

நீங்க செய்யற இந்த தவறுகள் உங்கள் பற்களை மோசமாக்கும் தெரியுமா!!

nathan

உங்களுக்கு தெரியுமா காலிபிளவரில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது..?

nathan

மனிதத்தன்மையை இழக்கவைக்கும் இந்த மது!

sangika

மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்ளுக்கு.

nathan

இந்த மாதிரி இருக்குறவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா…

nathan

உங்களுக்கு தெரியுமா அடிக்கடி சிறுநீர் வர காரணம் இதுதான்..?

nathan