30.6 C
Chennai
Saturday, May 18, 2024
4142 3663
ஆரோக்கிய உணவு

மருத்துவர் கூறும் தகவல்கள்! காளானை இவர்கள் சாப்பிடவே கூடாது ஏன் தெரியுமா…?

நன்மைகளை வழங்கக்கூடிய காளான் சில கெடுதல்களையும் ஏற்படுத்தக்கூடியது. அலர்ஜியில் தொடங்கி உயிரிழப்பு வரைகூட ஏற்படுத்த கூடியது காளான். இதனை சரியாக பயன்படுத்தினால் அருமருந்து அதுவே தவறாக பயன்படுத்தினால் கொடிய விஷம்.
காளானை சுத்தப்படுத்தும் முன்பு அதனை சுத்தப்படுத்தும் நீரில் சிறிது எலுமிச்சை சாறை கலக்கவும். ஏனெனில் காளான் வெளிப்புறத்தில் உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து விரைவில் கருப்பு நிறமாக மாறிவிடும். எனவே எலுமிச்சைச்சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் காளான் கருப்பாவதை தடுக்கிறது.

பின்னர் காளானை ஒரு துணியில் பரப்பி அதிலுள்ள ஈரம் காய்ந்தவுடன் சமைக்கவும். பொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை மூன்று நாட்கள்வரை ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்தலாம். ஃப்ரீசரில் வைக்கக்கூடாது. பாதியளவு எடுத்து உபயோகப்படுத்தி விட்டு மறுநாள் மீதியை உபயோகப்படுத்தலாம். ஆனால் திறந்து வைக்கக்கூடாது. அப்படி செய்தால் காளான் கறுத்துவிடும்.
ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு மூடிவைத்தால் மூன்று நாள் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். நறுக்கிய பிறகு கூட வைத்திருக்கலாம். சிறிது நிறம் மாறினால் பரவாயில்லை. ஆனால், பிசுபிசுப்பாக மாறினால் உபயோகப்படுத்தக் கூடாது.

காளானை நன்றாக சமைத்தபிறகே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காளான் சத்தான பொருளாக இருந்தாலும் அதனை அனைவரும் சாப்பிட்டு விட முடியாது.

சிலருக்கு சரும அலர்ஜி பிரச்சினைகள் இருக்கும், அப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் அரிப்பு, சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.4142 3663

Related posts

ஓட்ஸை எப்படி உப்புமா போன்று செய்து சாப்பிடுவது?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரே ஒரு மூலிகை தண்ணீர் போது உடல் எடையை சீக்கிரமாக குறைக்க!

nathan

ஆண் மீனைவிட பெண் மீனைத்தான் சாப்பிடவேண்டும். ஏன்.. எப்படி?

nathan

அவசியம் படிக்க..இந்த சின்ன முட்டைக்குள்ள இத்தனை சத்துக்களா?

nathan

பாசிப் பருப்பின் மகத்துவம்

nathan

தெரிஞ்சிக்கோங்க… முருங்கைக்காய் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா?

nathan

இரவில் தூங்குவதற்கு முன் பசித்தால் மீன் சாப்பிடலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்

nathan

பாக்கெட் உணவுகளைவிட மண் மணம் மாறா உணவுகள் ஏன் சிறந்தவை?

nathan