29.3 C
Chennai
Sunday, Jul 27, 2025
MIMAGE9af98dded1ec26ff2f907f
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க வாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயன்று பாருங்கள்…

வாய் துர்நாற்றம் என்பது அனைவரும் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். பெரும்பாலும் நம் வாயில் துர்நாற்றம் அதிகரிக்க காரணம் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களாகத்தான் இருக்கும். குறிப்பாக பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் சாப்பிட்டால் வாய்துர்நாற்றம் அதிகமாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக நமக்கு பிடித்த பெரும்பாலான உணவுகளில் பூண்டும், வெங்காயமும்தான் அதிகம் இருக்கிறது.

பூண்டு மற்றும் வெங்காயம் இரண்டும் அல்லியம் குடும்பத்தை சேர்ந்தது. இவை சல்பர் கலவைகளை கொண்டுள்ளதால் காரமான சுவையை கொண்டுள்ளது. அவை வெட்டப்படும் போதும், நசுக்கப்படும் போதும் வாயுவை வெளியிடுகிறது, இதனால் உருவாகும் பாக்டீரியா துர்நாற்றத்தை உருவாக்குகிறது. வெங்காயம் செரிக்கும் போது இந்த வாசனை மூலக்கூறுகள் நுரையீரலை அடைந்து இரத்தத்தில் கலப்பதால் துர்நாற்றத்தை வெளியிடுகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தை எப்படி நீக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பாலின் சத்துக்கள்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி பாலானது வெங்காயம் மற்றும் பூண்டால் ஏற்படும் வாசனைகளையும், வாயுக்கோளாறுகளையும் குறைக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுளள்து. கொழுப்பு நீக்க பட்ட பாலை விட கொழுப்பு நீக்கப்படாத பால் பூண்டு மற்றும் வெங்காய வாசனையை அதிகம் குறைக்கக்கூடும். எனவே பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிட பிறகு ஒரு டம்ளர் பால் குடிப்பது உங்களை பல சங்கடங்களில் இருந்து பாதுகாக்கும்.
எலுமிச்சை

எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவற்றால் உங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை குறைக்கக்கூடும். மேலும் இதிலிருக்கும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் கெட்ட வாசனையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிட்ட பிறகு இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச்சாறை தண்ணீரில் கலந்து குடிக்கவும். இதனை வாயில் ஊற்றி நன்கு கொப்பளித்து அதன்பின் துப்பவும்.
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா வாய் துர்நாற்றத்தை விரட்டும் மற்றொரு சிறந்த நிவாரணம் ஆகும். இது உங்கள் வாயில் இருக்கும் pH அளவை சமநிலையில் வைப்பதன் மூலம் உங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவையும், ஒரு ஸ்பூன் உப்பையும் சேர்த்து கலக்கி கொள்ளவும். இதனை வாயில் ஊற்றி நன்கு கொப்பளிக்கவும்.
கொத்தமல்லி

கொத்தமல்லியின் வாசனை வெங்காயம் மற்றும் பூண்டின் விரும்பத்தகாத வாசனையை குறைக்கக்கூடும். மேலும் இது உங்கள் வாயை சுத்தப்படுத்தி வாசனையை விரட்டக்கூடும். பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிட்ட பிறகு சில கொத்தமல்லி இலைகளை நன்கு மெல்லவும்.
சர்க்கரை

சர்க்கரை கெட்ட வாசனையை போக்கும் சிறந்த மருந்தாகும். சர்க்கரையின் கரடுமுரடான துகள்கள் கெட்ட வாசனையை போக்கும் பாக்டீரியாவை அழிக்கிறது. எனவே சில சர்க்கரை துகள்களை வாய்துர்நாற்றமாக இருக்கும்போது வாயில் போட்டு மெல்லவும்.
ஆப்பிள்

ஆப்பிளில் இயற்கையாகவே இருக்கும் என்சைம்கள் சல்பர் மூலக்கூறுகளை உடைக்கக்கூடும். இதனால் வெங்காயத்தால் ஏற்படும் வாசனையை விலக்குகிறது. எனவே வாய்துர்நாற்றத்தை போக்க ஆப்பிளை சாப்பிடவோ அல்லது ஆப்பிள் ஜுஸையோ குடிக்கவும்.MIMAGE9af98dded1ec26ff2f907f

Related posts

இந்த காரணங்களுக்காக கருத்தரிப்பதை தள்ளி போடாதீங்க

nathan

இந்த 6 ராசிக்காரங்க ரொம்ப மோசமான தீய குணம் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

உச்சக்கட்ட பேரதிர்ஷ்டம்! 2023 வரை பணமழையில் 3 ராசிகள்

nathan

திருமணத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் தெரியுமா?

nathan

வெண்மையான பற்கள் கிடைக்க நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டியவை !!

nathan

ஆண், பெண் உறவில் வயது வித்தியாசம் அவசியமா?

nathan

இந்த ஐந்து ராசிக்காரர்கள் மிகவும் சூடாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்களாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

nathan

கர்ப்ப காலத்தில் வரும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை நீக்க இயற்கை வழிகள்

nathan

கட்டாயம் இதை படியுங்கள் தைராய்டு பிரச்னைக்கு எது முக்கிய காரணம்..?

nathan